thiruvannamalai | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருகார்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தக் கார்த்திகை தீபத்திருவிழா நவ. 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபத் பரணி திருவிழா இன்று (நவ.26) நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்கான பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, கரூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று முதல் நவ.27 வரை 695 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மக்கள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் பேருந்து டிக்கெட்டுகளை முன்புதிவு செய்து கொள்ளலாம்
மேலும், கோவிலில் மலையேறும் பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 14,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை அமைச்சர் எ.வ.வேலு. மற்றும் எம்.பி. அண்ணாதுரை தொடங்கிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“