பொதுச்செயலாளர், பொருளாளர் யார்? : 9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு

DMK meet : கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் பொருளாளராக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது

Tamil News Today Live
Tamil News Today Live

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் வரும் 9 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு காணொளி மூலம் நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், 9-9-2020 புதன்கிழமை காலை 10.00 மணி அளவில், எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருள் : பொதுச்செயலாளர் – பொருளாளர் தேர்வு’, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 3-9-2020 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், எனது தலைமையில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சமீபத்தில் காலமான நிலையில், பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் பொருளாளராக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மறுநாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk general committee meeting m k stalin general secretary duraimurugan

Next Story
’தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்’ வீரமான வீரலட்சுமி!first women ambulance driver
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com