பாவூர்சத்திரம்: திமுக கூட்டத்தில் ஒலித்த பாரத் மாதா கி ஜெய் கோஷம்.. பரபரப்பு

பாவூர்சத்திரத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பாரத் மாதா கி ஜெய் என கோஷம் எழுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாவூர்சத்திரத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பாரத் மாதா கி ஜெய் என கோஷம் எழுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK general meeting in Paoorchatram by youths who chanted Bharat Mata Ki Jai

காரில் இருந்தவர்களை தாக்கும் திமுகவினர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டார். கூட்டத்தின்போது, அந்த வழியே காரில் சென்றவர்கள் பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்டனர்.

Advertisment

இதனால் ஆத்திரம் அடைந்த திமுக தொண்டர்கள் காரை பிடித்து உள்ளே இருந்தவர்களை தாக்கத் தொடங்கினர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சொல்லியும் அவர் கேட்கவில்லை.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாளையங்கோட்டையில் இருந்து தென்காசிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் திமுகவினரை வெறுப்பேற்றும் வகையில் இவ்வாறு கோஷமிட்டது தெரியவந்தது.

எனினும் காரின் உரிமையாளர்கள் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. சேதமடைந்த காரையும் தாங்களே சரிசெய்துக் கொள்கிறோம் எனக் கூறிவிட்டு புகார் அளிக்காமல் சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tirunelveli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: