திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி?

ஏற்கனவே அவருக்கு இரண்டு கட்ட தடுப்பூசிகளும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DMK general secretary Durai murugan tests covid19 positive

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் பலரும் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டு வருகின்றனர். தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிட்டார். ஏற்கனவே அவருக்கு இரண்டு கட்ட தடுப்பூசிகளும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிவுகள் நேர்மறையாக வரவும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

82 வயதான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக பல்வேறு தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபட்டு வந்த அவர் தன்னுடைய வாக்கினை ஏப்ரல் 6ம் தேதி பதிவு செய்தார்.

பின்னர் சென்னை திரும்பிய அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சோதனையை மேற்கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk general secretary durai murugan tests covid19 positive

Next Story
பசுமை தீர்ப்பாய உறுப்பினர்: மாஜி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு புதிய பதவிChennai city Tamil News: Girija Vaidyanathan appointed as expert member of National Green Tribunal (NGT) Southern Zone
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com