பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம்: மு.க.ஸ்டாலின்- சர்வகட்சி தலைவர்கள் அஞ்சலி

DMK General Secretary K Anbazhagan Dies Live : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்

DMK General Secretary K Anbazhagan Dies At 97 In Chennai Updates : உடல்நல குறைவின் காரணமாக சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97.


தி.மு.க. தொண்டர்களால் ‘பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்ட க.அன்பழகன், முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த மாதம் 24-ம்தேதி அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை மருத்துவமனை சென்று அன்பழகனின் உடல்நலம் விசாரித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வயது முதிர்வின் காரணமாக அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலன் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நள்ளிரவு 1.10 மணி அளவில் அன்பழகன் மரணம் அடைந்தார். துக்கம் தாங்காமல் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழ, ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனையில் திரண்டனர். அதனை தொடர்ந்து க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் அன்பழகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Live Blog

DMK General Secretary K.Aanbazhagan Dies Updates : திமுகவினரால் ' இனமான பேராசிரியர்' என்று அழைக்கப்படும் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் காலமானார்.

18:16 (IST)07 Mar 2020
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “மூத்த அரசியல்வாதியான பேராசிரியர் அன்பழகனின் மறைவு வருத்தமளிக்கிறது; தமிழகத்தின் வளர்சிக்காக அன்பழகன் ஆற்றிய பணிகளை மறக்க முடியாது; அவரின் மறைவு தமிழகத்திற்கும், திமுகவிற்கும் பேரிழப்பு!” என்று தெரிவித்துள்ளார்.

17:59 (IST)07 Mar 2020
மின் மயானத்தில் உடல் தகனம்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அயனாவரம் வேலங்காடு  மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

17:51 (IST)07 Mar 2020
உடல் மின்மயான தகன மேடைக்குள் அனுப்பப்பட்டது

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், உடல் மின்மயான தகன மேடைக்குள் அனுப்பப்பட்டது.

17:48 (IST)07 Mar 2020
உடலுக்கு மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்துகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். உடன் தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளார்.

17:35 (IST)07 Mar 2020
உடல் மின்மயான தகன மேடைக்குகொண்டு செல்லப்பட்டது

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டு அடக்கம் செய்ய உள்ள வேலங்காடு மின் மயானத்தை அடைந்தது. அவருடைய உடல் மின் மயான தகான மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது.

17:22 (IST)07 Mar 2020
இறுதி ஊர்வலம் மின் மயானத்தை அடைந்தது

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டு அடக்கம் செய்ய உள்ள கீழ்ப்பாக்கம் மின் மயானத்தை அடைந்தது. ஒரு மணி நேர இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு மின் மயானத்தை அடைந்தது.

17:21 (IST)07 Mar 2020
இறுதி ஊர்வலத்தில் திமுகவின் முக்கிய தலைவர்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கெற்பு

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் இடுக்காட்டை நோக்கி நடந்துவருகிறது. இறுதி ஊர்வலம் வேலங்காடு பகுதியை அடைந்தது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், பொன்முடி, எ.வ.வேலு, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதிமாறன், கனிமொழி, இளைனஜ்ர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்

17:19 (IST)07 Mar 2020
கண்ணியம், மென்மை, கொள்கையில் பற்று அன்பழகனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் - பாஜக

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவுக்கு பாஜக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் பேரிழப்பு. கண்ணியம், மென்மை, கொள்கையில் பற்று போன்றவற்றை, அன்பழகனிடம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

17:10 (IST)07 Mar 2020
இறுதி ஊர்வலத்தில் திமுகவின் முக்கிய தலைவர்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் இடுக்காட்டை நோக்கி நடந்துவருகிறது. இறுதி ஊர்வலம் நியூ ஆவடி சாலையை அடைந்தது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், பொன்முடி, எ.வ.வேலு, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதிமாறன், கனிமொழி உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

17:05 (IST)07 Mar 2020
இறுதி ஊர்வலம் அயனாவரம் நியூ ஆவடி சாலையை அடைந்தது

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் இடுக்காட்டை நோக்கி நடந்துவருகிறது. இறுதி ஊர்வலம் நியூ ஆவடி சாலையை அடைந்தது.

17:03 (IST)07 Mar 2020
இறுதி ஊர்வலம் அயனாவரம் 100 அடி சாலையை அடைந்தது

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் இடுக்காட்டை நோக்கி நடந்துவருகிறது. இறுதி ஊர்வலம் அயனாவரம் 100 அடி சாலையை அடைந்தது.

17:00 (IST)07 Mar 2020
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் மறைவுச் செய்திகேட்டு துயரமடைந்தேன் - வெங்கையா நாயுடு

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், “திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான திரு. கே. அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

16:57 (IST)07 Mar 2020
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் இடுக்காட்டை நோக்கி நடந்துவருகிறது. இறுதி ஊர்வலத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், பொன்முடி, எ.வ.வேலு, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதிமாறன், கனிமொழி உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

16:24 (IST)07 Mar 2020
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான திமுக தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் நடந்து செல்கிறார்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்தில் இருந்து அவருடைய இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னள் அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், திருச்சி சிவா, கனிமொழி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

16:14 (IST)07 Mar 2020
இறுதி ஊர்வலம் தொடங்கியது; மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

16:06 (IST)07 Mar 2020
பேராசிரியர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். அவருடைய இறுதி ஊர்வலம் தொடங்கியது.

16:02 (IST)07 Mar 2020
பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

15:32 (IST)07 Mar 2020
அன்பழகன் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

15:26 (IST)07 Mar 2020
கவிஞர் வைரமுத்து பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

15:24 (IST)07 Mar 2020
காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி

காங்கிரஸ் தலைவரும் திருச்சி எம்.பி-யுமான திருநாவுக்கரசர் அன்பழகன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

15:22 (IST)07 Mar 2020
அன்பழகன் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் செய்தியில், “திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

15:14 (IST)07 Mar 2020
பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

15:08 (IST)07 Mar 2020
தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய மூத்த தலைவர் மறைந்தது வருத்தம் - தனியரசு

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தனியரசு, “தமிழ்ச்சமூகத்தின் எல்லா வகையான நலங்களுக்கு தமிழ் இனப்பற்றோடு, தமிழ் மொழிப்பற்றோடு, சமூக நீதி கருத்துக்களை சமத்துவக் கருத்துகளை பட்டிதொட்டியெல்லாம் அன்பழகனார் தன்னுடைய அன்பால், பண்பால், அறிவாற்றலால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கு தொடர்ந்து அரசியல் அறிவை ஊட்டி வளர்த்த் மகத்தான் தலைவர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனார். பேராசிரியரின் மறைவு தமிழ்ச் சமூகத்தின் ஒரு பாரம்பரிய மிகப்பெரிய மூத்த தலைவரை இழந்தோம் என்கிற வருத்தத்தை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பதிவு செய்கிறேன்.” என்று கூறினார்.

14:59 (IST)07 Mar 2020
உங்கள் இலட்சியப் பெருவழியில் கொள்கைப் பேரன்களாக பயணிப்போம் - உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இனமானம் காக்கக் கழகக் கொடி பிடித்து, கொள்கைப் பாடம் நடத்தியவர் எங்கள் இனமான பேராசிரியர் தாத்தா. அறிவாலயத்தின் பேராசிரியரே, உங்கள் இலட்சியப் பெருவழியில் கொள்கைப் பேரன்களாக நாங்கள் என்றும் பயணிப்போம்.” என்று கூறினார்.

14:10 (IST)07 Mar 2020
கவிஞர் அறிவுமதி புகழஞ்சலி!

14:07 (IST)07 Mar 2020
பேராசிரியர் அன்பழகன் தமிழகத்தின் சிறந்த பகுத்தறிவுவாதி - நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.   பேராசிரியர் தமிழகத்தின் சிறந்த பகுத்தறிவுவாதி, அவரின் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும்  தோழர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.  

12:47 (IST)07 Mar 2020
பேராசிரியர் அன்பழகன் இறுதி மரியாதை: பிரஷாந்த் கிஷோர் நேரில் அஞ்சலி

2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் ஆலோசராக செயல்படும் பிரஷாந்த் கிஷோர்  மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர் 

12:44 (IST)07 Mar 2020
பேராசிரியர் மறைவு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல்

க.அன்பழகனின் இழப்பு திமுக விற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக கட்சியினருக்கும் தேமுதிக சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகிறேன் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் 

12:18 (IST)07 Mar 2020
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் அஞ்சலி

தமிழகத்தில் பின்தங்கிய மக்களுக்காக போராடியதில் பேராசிரியர் பெருந்தகையின் பங்கு மிகப்பெரியது. அவரின் செயல்களை பாராட்டும் பொருட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சுடர் விருது வழங்கி கௌரவித்ததாகவும்  தெரிவித்தார்.  தனிப்பட்ட முறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும், என் மீதும் மிகுந்த பற்றுதல்களும், அரவணைப்பும் கொண்டவர்.  21-ம் நூற்றாண்டில் இணையற்ற தலைவர். யார் மீதும் அவர் பொறாமைக் காட்டியதில்ல, அவதூறு பரப்பியதில்லை. கடுமையான நெருக்கடிகளின் போதும் நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் .    

11:46 (IST)07 Mar 2020
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இந்திய நாடு மதவெறி சக்திகளின் ஆட்சியின் கீழ் மதசார்பின்மை மாநில மற்றும் மொழி உரிமைகள் மீது தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையில், இக்கொள்கைகளில் ஆழ்ந்த பிடிப்பு கொண்ட பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாததாகும். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

11:43 (IST)07 Mar 2020
பேராசிரியர் க.அன்பழகன் மரணம்: இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

11:37 (IST)07 Mar 2020
புதுச்சேரி முதல் அமைச்சர் வே. நாராயணசாமி நேரில் அஞ்சலி

மறைந்த திமுக பொதுச் செயல்லாளர் க.அன்பழகன் இல்லத்தில் புதுச்சேரி ஒன்றியப் பகுதி முதல் அமைச்சர் வே. நாராயணசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

11:33 (IST)07 Mar 2020
மாலை 4.30 மணியளவில் இறுதி ஊர்வலம் செய்யப்படும் - எம்.எல்.ஏ சேகர்பாபு

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.30 மணியளவில் இறுதி ஊர்வலம் செய்யப்படும் என்று எம்.எல்.ஏ சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

இறுதி ஊர்வலம் அவரின் இல்லத்தில் இருந்து புறப்பட்டு வேலங்காடு சுடுகாடில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அவருடைய அடக்கம் நடைபெற இருக்கின்றது. கழகத் தோழர்களும், உற்றார் உறவினர்களும், அவர் மீது பாசம் கொண்டவர்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளை சார்ந்தவர்களும் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

11:25 (IST)07 Mar 2020
நேர்மையான அரசியல்வாதி க.அன்பழகன் - ராமதாஸ் இரங்கல்

திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் 

11:23 (IST)07 Mar 2020
பேராசிரியர் அன்பழகன் மரணம்: நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழனிற்கு நடிகர் ரஜின்காந்த் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என்றும் புகழாரம்.     

11:13 (IST)07 Mar 2020
க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு - தமிழக முதல்வர் இரங்கல்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.  க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு; அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

11:11 (IST)07 Mar 2020
துயரமும், வருத்தமும் அடைந்தேன் - கே. எஸ். அழகிரி இரங்கல்

அன்பழகன் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன் எவரிடமும் அன்புக் காட்டி, இனிமையாக பழகக் கூடியவர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

10:41 (IST)07 Mar 2020
பொங்கிவரும் கண்ணீருடன், இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - வைகோ

தமிழகத்தில் திராவிடர் கொள்கையை பாதுகாத்த மாவீரர் என்று வைகோ புகழாரம். பொங்கிவரும் கண்ணீருடன், மதிமுக சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

10:33 (IST)07 Mar 2020
பேரறிவாளன் அன்பழகன் மரணம்: ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் இரங்கல்

தியாகமும், தன்னலம் அற்ற தொண்டும் நிறைந்த புகழ் வரலாற்றில், எந்நாளும் அழிக்க முடியாத தலைவர்களுள் முதன்மையானவர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், எந்தவித சர்ச்சைகளுக்கும் ஆட்படாதவர், கொண்ட கொள்கைகளில் உறுதியானவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களை ஊக்குவித்து, அவரது தலைமையையும் மதித்து ஏற்றுக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதுகாத்த பண்பாளர், 100 ஆண்டு கடந்து வாழ்வார் என்று நம்பி இருந்த நேரத்தில், நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

பொதுவாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த இனமானப் பேராசிரியரின் பெயரும் புகழும், எந்நாளும் நிலைத்து இருக்கும். தமிழக ஆம்ஆத்மிகட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

10:28 (IST)07 Mar 2020
க. அன்பழகன் மரணம்: நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொது மக்கள் இறுதி அஞ்சலி

கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் (வாட்டர் டேங் ) இருக்கும் அன்பழகன் அவர்களின் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னணி கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்ககள், பொது மக்கள் திரளாக தங்களது இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். 

stalin anbazhagan  

10:08 (IST)07 Mar 2020
மிகுந்த வேதனையும்,வருத்தத்தையும் அளிக்கிறது - பொன்.ராதா கிருஷ்ணன்

தமிழக பாஜக-வின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.      

திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்கள், தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திட எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  

08:53 (IST)07 Mar 2020
ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் - கமல்ஹாசன் இரங்கல்

தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.   

08:21 (IST)07 Mar 2020
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இரங்கல்

பேராசரியர் மரணம்: திமு கழகத்தின் மூத்த தலைவர் மற்றும் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களின் மறைவு குறித்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  

08:18 (IST)07 Mar 2020
பேராசிரியர் க. அன்பழகன் மரணம்: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆழந்த இரங்கல்

தமிழகத்தின் முக்கியத் தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆழந்த இரங்கல் - ஜி.ராமகிருஷ்ணன்

08:14 (IST)07 Mar 2020
பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம் - கி.வீரமணி (3/3)

அந்த கொள்கை மாவீரரின் மறைவுக்குத் தாய்க்கழகம் தனது வேதனை மிகுந்த துயரத்தை தெரிவிப்பதுடன், அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் திராவிடர் கழகத்தினர் நிகழ்ச்சிகள் ஏழு நாட்களுக்குத் தள்ளி வைக்கப்படுகின்றன. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், கொள்கைக் குடும்பத்துத் தலைவர் தளபதி உட்பட அனைவரது துயரத்திலும், தாய்க்கழகம் பங்குபெற்று, நாம் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு, இலட்சியச் சுடரை அணையாது காத்து, கொள்கைப் பயணத்தை தொடருவோமாக!

பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்!

பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார்.

08:13 (IST)07 Mar 2020
பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம் - கி.வீரமணி (2/2)

அவர் 98 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றாலும் எப்படி அவரது பிரிவை தாங்கி கொள்வது என்று; அவரை இழந்து தவிக்கும் அளவுக்கு நமது இலட்சியப் பயணத்தின் ஒளிகூட்டிய இனமானச்சுடர் அவர். அவரது பொதுவாழ்க்கை 85ஆண்டு காலம் என்ற வரலாற்றுச் சாதனை இந்தியப் பொதுவாழ்வுக்கே ஒரு தனித்தன்மையான எடுத்துக்காட்டு. தி.மு.க.வில் கலைஞர் மறைந்தவுடன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக ஏற்று கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாக திகழ்ந்த பண்பின் இமயம் அவர் - எடுத்துக்காட்டுக்கு எப்போதும் இவரே என்ற தனித் தகுதி படைத்தவர்.

08:13 (IST)07 Mar 2020
பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம் - கி.வீரமணி

அந்தோ, கொள்கை மாவீரர்எம் இனமானப் பேராசிரியர் மறைந்தார்என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம்!

நமது இனமானப் பேராசிரியரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற பொதுச் செயலாளராக 43 ஆண்டுகள் இருந்தவரும், எவரைச் சந்தித்தாலும் கைகுலுக்கி தமது அன்பினையும், பண்பினையும் வெளிப்படுத்தி, எந்த மேடையிலும் தந்தை பெரியார் தம் சுயமரியாதைச் சூரணத்தை, ஒரு மருத்துவர் நோயாளிக்குத் தருவதைப் போல் தவறாது தருபவரும், அறிஞர் அண்ணாவின் உள்ளம் கவர்ந்த தம்பிகளில் முதன்மையரும், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் தலைமையை ஏற்று கடைசி வரை கட்டுப்பாடு காத்தவருமான, கொள்கை மாவீரர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம்!

08:07 (IST)07 Mar 2020
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் - டிடிவி தினகரன்

தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  

08:00 (IST)07 Mar 2020
திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணீர் மடல்

உங்களது அறிவொளியில் எங்களது பயணம் தொடரும். பேராசிரியர் பெருந்தகையே! 

07:37 (IST)07 Mar 2020
திமுக 7 நாள் துக்கம், இன்று மாலை 4 மணிக்கு உடல் தகனம்

கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில், மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல் இன்று மாலை  4.45 மணிக்கு  தகனம் செய்யப்பட உள்ளது

Web Title:

Dmk general secretary k anbazhagan dies at 97 in chennai mk stalin live updates tamil nadu news today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close