போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு, கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை துறைமுகத்தின் 10-ம் எண் நுழைவு வாயிலில் தொடங்கி, தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் மதுரவாயல் வரை உயர்த்தப்பட்ட தூண்களின் மீது சுமார் 20 கி.மீ தூரத்துக்கு பறக்கும் விரைவு சாலையாக இதைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, பல்வேறு இடங்களில் தூண்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இதற்கிடையே சுற்றுச்சூழல் விதிமீறல்களை காரணம் காட்டி, இத்திட்டம் அதிமுக அரசால் 2012-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மதுரவாயல் – சென்னை துறைமுகம் இடையேயான 20.6 கிமீ நீளமுள்ள மேம்பாலச் சாலைத் திட்டம், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் தொடங்க உள்ளது.
சென்னை துறைமுகம் மற்றும் தமிழக அரசின் கடன்கள் மற்றும் பங்களிப்புகள் மூலம்’ இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரூ.5,770 கோடி திட்டத்திற்கு, திமுக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் யாத்திரை மையங்கள் மற்றும் முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மேம்படுத்த தமிழக நெடுஞ்சாலைத்துறை முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் எட்டு நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது.
மாநிலத்தில் 6,606 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன, இதில் 1,472 கிமீ மாநில அரசின் தேசிய நெடுஞ்சாலை பிரிவாலும், 5,134 கிமீ தேசிய நெடுஞ்சாலை துறையாலும் பராமரிக்கப்படுகின்றன.
மாநில நெடுஞ்சாலைகள் உட்பட நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 70,556 கி.மீ. தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில்’ தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 10% க்கும் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 25% க்கும் அதிகமான வணிக போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறுகிறது.
"வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவது அவசியம்" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், 2026ம் ஆண்டுக்குள் தரைப்பாலங்களை மாற்றி உயர்மட்ட பாலங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 2022-23ம் ஆண்டில் 435 பாலங்கள் கட்ட ரூ.1,105 கோடி ஒதுக்கப்பட்டது. “நபார்டு வங்கிக் கடன் திட்டத்தின் மூலம் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன, அதற்கான செலவில் 20% அரசே ஏற்கும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.