முந்தைய அதிமுக அரசு தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் மொழி உச்சரிப்பை போலவே ஆங்கிலத்திலும் உச்சரிப்பு இருக்கும் விதமாக ஆங்கிலத்தில் எழுத்துகளை மாற்றம் செய்துஅரசாணை வெளியிடப்பட்டது. அதிமுக அரசு வெளியிட்ட அந்த ஊர்களின் புதிய ஆங்கில எழுத்து பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, அதில் கோயம்புத்தூர் ஆங்கில எழுத்தில் Coimbatore ஆக இருக்கிறது. இதை Koyampuththoor என மாற்றப்பட்டிருந்தது. வேலூர் ஆங்கில எழுத்தில் Vellore என்று இருப்பதை Veeloor என மாற்றப்பட்டிருந்தது. ஆனால், இந்த பெயர் மாற்றம் குறித்து கலவையான விமர்சனங்களும் சமூக் ஊடகங்களில் விமர்சனங்களும் எழுந்தன.
பல தமிழ் அறிஞர்கள் இந்த முறையை தமிழ் அடையாளத்தை சிதைக்கும் முயற்சியாக கருதினர். பெயர் மாற்றங்கள் துறைகள் முழுவதும் ஒரு பெரிய திருத்தத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்போதைய அதிமுக அரசு ஊர் பெயர்களை தமிழ்மொழியில் உச்சரிப்பதைப் போலவே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலத்தில் ஊர்களின் பெயர்களில் ஆங்கில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தது. ஆனால், அதிமுக அரசின் இந்த ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுவதில் மாற்றம் செய்த முன்மொழிவு திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதிமுக அரசு ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து முன்மொழிந்ததை திமுக அரசு பரிசீலிக்கவில்லை என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், அதிமுக அரசு முன்மொழிந்த இந்த உத்தரவால் சில ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சையில் சிக்கியது. பின்னர், அதிமுக அரசே அந்த அரசாணையை வாபஸ் பெற்றது. அதற்கு பிறகு அதிமுக அரசே அந்த திட்டத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அதே நேரத்தில், ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்வது குறித்து மாநில அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் தமரமணியில் உள்ள ஒரு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்துக்கான புதிய கட்டிடம் பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.
பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. பிரதமர் அலுவலகத்தின் வார்த்தைக்காக அதிகாரிகள் காத்திருப்பதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ம் தேதி தமிழகம் வரவிருந்த நிலையில், கொரோனா காரணமாக பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி வழியாக திறந்து வைப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அன்றைக்கே பிரதமர் மோடி செம்மொழித் தமிழ் மத்திய நிறுவன கட்டிடத்தை திறந்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் தன்னாட்சி நிறுவனமாகவே இருக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.