Advertisment

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஒப்புதல் கிடைக்கும் நம்பிக்கையில் ஆளுநரிடம் தி.மு.க அரசு மென்மையான போக்கு

தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, 2022-க்கு ஆளுநர் மிக விரைவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மாநில சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சனிக்கிழமை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu, R N Ravi, Tamil Nadu Governor, Tamil Nadu government, M K Stalin, Chennai, DMK, S Regupathy, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, ஒப்புதல் கிடைக்கும் நம்பிக்கையில் ஆளுநர் மீது தி.மு.க மென்மையான போக்கு, ஆர் என் ரவி, திமுக, ரகுபதி, online gambling, Tamil Nadu against online gambling, Tamil Nadu Prohibition of Online Gambling and Regulation of Online Games Bill

தி.மு.க அரசு ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான தனது நிலைப்பாட்டில் மென்மையான போக்கை கடைபிடிக்கும் வகையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவில் ஆளுநர். ஆர்.என். ரவி விரைவில் கையெழுத்திடுவார் என்று தமிழக அரசு சனிக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisment

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தி.மு.க தலைமையிலான அரசு, ஆரம்பத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியைத் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், ஆளுநர் விரைவில் கையெழுத்திடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, 2022-க்கு ஆளுநர் மிக விரைவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மாநில சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சனிக்கிழமை தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து, ஆளுநர் ஆர்.என். ரவி எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக அமைச்சர் ரகுதிபதி தலைமையில் தமிழக அரசு பிரதிநிதிகள் குழுவை ஆர்.என். ரவியை வியாழக்கிழமை சந்தித்தனர். இந்த குழுவை வழிநடத்திய அமைச்சர் ரகுபதி கூறுகையில், “நாங்கள் ஆளுநரை குறை கூறவில்லை. நாங்கள் கேட்டதெல்லாம், அவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தள்ளிப் போட வேண்டாம் என்பதுதான். அவரது அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் விளக்கம் அளித்து தெளிவுபடுத்தியுள்ளோம். எங்கள் நிலைப்பாட்டை விளக்கியுள்ளோம்.” என்று கூறினார்.

அக்டோபர் 4-ம் தேதி அவசரச் சட்டத்துக்கு அரசாங்கம் ஆளுநரின் ஒப்புதலை பெற்றதாகவும், விதிகள் மற்றும் விதிமுறைகளை வகுத்த பின்னர், அரசாணை வெளியிடப்படும் என்றும் ரகுபதி கூறினார். “இருப்பினும், அக்டோபர் 5-ம் தேதி, நாங்கள் ஒரு மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்போம் என்று சட்டசபையில் முடிவு செய்யப்பட்டது. அவசர சட்டம் பிறப்பித்த அரசாணையை அரசிதழில் வெளியிட்டோம்” என்று கூறினார்.

ஓய்வுபெற்ற நீதிபதி, நீதிபதி கே சந்துரு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதா, எந்த ஆன்லைன் கேம்ஸ் வழங்குனரும் ஆன்லைன் சூதாட்ட சேவைகளை வழங்க கூடாது, பணம் அல்லது பிற பங்குகளைக் கொண்டு எந்த ஆன்லைன் விளையாட்டையும் விளையாட அனுமதிக்க கூடாது அல்லது எந்த வடிவத்திலும் விதிகளை மீறி வேறு எந்த ஆன்லைன் கேமையும் விளையாட அனுமதிக்க கூடாது.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், அப்போதைய அதிமுக அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் தடை செய்தது. பின்னர், அந்த சட்டம் போதிய ஆதாரங்கள் மற்றும் நியாயம் இல்லாத காரணத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Governor Rn Ravi Online Games
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment