/tamil-ie/media/media_files/uploads/2023/06/rn1.jpg)
திமுக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. குறிப்பாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில், சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், திமுக அரசு தயாரித்து கொடுத்த இடங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் சேர்த்ததை நீக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு, முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதனால் ஆர். ரன். ரவி வெளிநடப்பு செய்தார். மேலும் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதில் தமிழகம் என்பதுதான் சரி என்று ஆளுநர் கூறியதற்கு திமுக அரசு கடுமையாக விமர்சித்தது.
செப்டம்பர் 2021 ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி ஏற்றதிலிருந்து, தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு சட்ட மசோதாக்களை ஆளுநர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம்சாட்டியது. குறிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பினார். மேலும் அது இரண்டாவது முறையாக மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.
அந்நேரத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, “ இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்யாமல், தேவையற்ற அரசியலை ஆளுநர் செய்கிறார். தமிழ்நாடு பாஜகவின் தலைமை போல அவர் செயல்படுகிறார்” என்று விமர்சித்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில், கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசுகையில் ” கோவை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே இது ஒரு தீவிரவாத செயல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உபயோகப்படுத்திய பொருட்களை அதை நிரூபித்தன. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை சரியாக கண்டுபிடித்த காவல்துறையை நான் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் சில மணி நேரங்களில் கோவை குண்டு வெடிப்பு தொடர்பான தகவல் தெரிந்தும், என்.ஐ.ஏ வருவதற்கு ஏன் 4 நாட்கள் எடுத்துகொண்டார்கள். என்.ஐ.ஏ தலையீடு தேவை இல்லாத நேரத்திலும், அவர்களை அழைக்க 4 நாட்கள் ஏன் தேவைபட்டது என்று தெரியவில்லை” என்று கூறினார்.
இந்நிலையில் இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி-யை நீக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மனு அளிக்கப்பட்டது. அதில் ஆளுநர் ஒப்புதல் வழங்காத, 20 சட்ட மசோதாக்கள் பற்றிய குறிப்பு இந்த மனுவோடு இணைக்கப்பட்டது.
ஆர்.என். ரவி முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. 2012-ல் அவர் பணி ஓய்வு பெற்றார். கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக பணியாற்றினார். இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோகராகவும் அவர் நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு நாகாலந்துக்கும்- இந்தியாவிக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைதி பேச்சுவார்த்தை இவர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் ஆளுநர் ரவி, தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படும் முன்னரே, இவரின் நியமனம் தமிழகத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டது. பொறுப்பேற்ற ஒரு மாதம் கழித்து, இதுவரை அரசு அமல்படுத்திய திட்டங்களின் முழு விவரங்கள் வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தலைமைச் செயலாளர் இறையன்பு, இது எப்போதும் நடைபெறும் வழக்கம் என்று கூறினார்.
திமுகவின், அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலியில் “ இது நாகாலாந்து கிடையாது, இது தமிழ்நாடு. காவல்துறைக்கு வேண்டுமானால் இதுபோன்ற யுக்திகள் கைகொடுக்கும். ஆனால் அரசியலில் இதுபோன்ற யுக்தி, எடுபடாது. இதை வைத்து இங்கே ஒன்றுமே செய்ய முடியாது” என்று விமர்சித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us