/tamil-ie/media/media_files/uploads/2022/03/cpm.jpg)
TN Urban Local Body elections 2022
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில்’ மொத்தம்12,607 பதவிகளுக்கு’ கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
இந்த தேர்தல்’ பலமுனைப் போட்டியாகத் தோன்றினாலும், மாநிலம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் முக்கியப் போட்டி நிலவியது.
இறுதியாக’ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதன் ஒருபகுதியாக’ 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. நகராட்சி, பேரூராட்சியிலும் கூட திமுக மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது.
அதிமுகவும், பாஜக கட்சிகளும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. அதிமுகவை பொறுத்தவரையில், வெற்றி வாய்ப்பை இழந்ததோடு, அக்கட்சிக்கு இது அதிர்ச்சிக்குரிய தோல்வியாக அமைந்தது.
நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,373 கவுன்சிலர்கள்; 138 நகராட்சிகளில் 3,842 கவுன்சிலர்கள்; 489 பேரூராட்சிகளில் 7,604 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று (மார்ச்.2) பதவியேற்றனர்.
தொடர்ந்து நாளை (மார்ச்-4) காலை 9:30 மணிக்கு மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கஉள்ளது. பிற்பகல் 2:30 மணிக்கு துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் துணை மேயர் பதவி, கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி, மற்றும் 4 நகராட்சி துணைத்தலைவர், 4 பேரூராட்சித் தலைவர், 6 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக அறிவித்துள்ளது.
இதோ அந்த அறிக்கை!
/tamil-ie/media/media_files/uploads/2022/03/deef0889-41db-4776-bad9-0361d84fc3d8.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.