முன்னாள் முதல் அமைச்சரும், மறைந்த தி.மு.க தலைவருமான மு. கருணாநிதி, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவரது உடல் செனனை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கருணாநிதி நினைவு தினத்தில் அமைதி பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இந்த அமைதி பேரணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “ முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7 (புதன்கிழமை) அன்று காலை 7 மணிக்கு நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில், “அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“