Dmk | Rs Bharathi | Lok Sabha Election | தேர்தல் ஆணையத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “தி.மு.க மற்றும் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நற்பெயரை கெடுக்கும் வகையில் தவறான நோக்கத்துடன் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பொய் பரப்புரை செய்யப்படுகின்றது.
அவதூறுகளை பரப்பி வருகின்றனர். கோவில்களை தி.மு.க. அழிப்பதாக நிர்மலா சீதாராமன் வெறுப்பை தூண்டும் விதமாக பேசுகிறார். மோடியின் கோவை ரோடு ஷோ நிகழ்ச்சியில பள்ளிக் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. மேலும், பல்வேறு இடங்களில் பறக்கும் படையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீது தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி புகார் மனு அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“