திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுனர் ஆர்.என். ரவியை எதிர்த்து தமிழக பாரதிய ஜனதா கட்சி போராடுமா என்று இன்றைக்கு வெளிவந்துள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆளுனர் ஆர்.என். ரவியை சந்திக்க திமுக தரப்பில் பல்வேறு முறை நேரம் ஒதுக்க கேட்கப்பட்டது. ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை.
மேலும், ஒரு ஆளுனர் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது ஏன்? இதைப் பற்றியும் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்துமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.
தொடர்ந்து, “அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா குண்டர்களின் கட்சியாக மாறிவிட்டது. சிறைக்கு செல்லும் ரவுடிகள் சிறைக்க செல்லாமல் காவி துண்டைப் போற்றிக் கொண்டு பாரதிய ஜனதாவுக்குள் நுழைந்துவிடுகின்றனர்.
அந்த வகையில் ரவுடிகளின் சரணாலயம் ஆக பாரதிய ஜனதா கட்சி திகழ்கிறது. கர்நாடகாவில் எம்.பி. தேஜஸ்வி சூர்யா உடன் பிரபல ரவுடி சுனில் ரத்த தான முகாமில் கலந்துகொண்டுள்ளார்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil