Advertisment

நான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம் - தமிழருவி மணியன்

Tamilaruvi manian : கனிமொழி அதிலும் இந்தி உரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர்கள் வீட்டில் மட்டும் எல்லோரும் இந்தி பேசலாம்.

author-image
WebDesk
New Update
DMK, Hindi inposition, Kanimozhi, chennai airport, Tamilaruvi maniyan, dmk hindi protest, complaint, karunanidhi, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,

நான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம். திமுக இந்தி போராட்டம் நடத்தியது. இதனால் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உருவானது. இதனால் மக்கள் இந்தி படிப்பதை நிறுத்தினார்கள் . ஆனால கருணாநிதி வீட்டில் எல்லோரும் இந்தி படித்துவிட்டனர் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை விமான நிலையில் திமுக எம்பி கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், அங்கு பணியிலிருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா? என்று எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக கனிமொழி கோபத்துடன் டுவிட் செய்து இருந்தார். கனிமொழியின் இந்த டிவிட் இணையத்தில் வைரலாகவே நாடு முழுக்க மீண்டும் இந்தி திணிப்பிற்கு எதிரான அதிர்வலைகள் எழுந்துள்ளது. தமிழகம் இந்திக்கு எதிராக கொதிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தனியார் செய்தி சேனலுக்கு இந்தி திணிப்பு தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது, எனக்கு என்னுடைய மொழிதான் முக்கியம். என்னுடைய தாய் மொழிதான் எனக்கு எப்போதும் முக்கியம். ஆனால் இந்தியா எனது தாய்நாடு. நான் எப்போதும் இந்தியன்தான். மொழி திணிப்பை ஏற்க முடியாது. என்னால் ஒரு தமிழனாகவும், ஒரு இந்தியனாகவும் இருக்க முடியும். இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள கூடாது. இந்தி திணிப்பு என்று இல்லை, எந்த விதமான திணிப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள கூடாது. வலுக்கட்டாயமாக எதையும் ஒருவரிடம் திணிக்க கூடாது . நானும் கூட இந்தி திணிப்பிற்கு எதிராக பேசி இருக்கிறேன். போராடி இருக்கிறேன். நான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம். அவர்கள் வீட்டில் பலர் இந்தி பேசுவார்கள்.

என்னை போன்ற சாதாரண மனிதர்கள் இந்தி பேச முடியவில்லை. கனிமொழி நன்றாக இந்தி பேச கூடியவர். டெல்லி அரசியல் தலைவர்களிடம் இவர் இந்தியில் பேசி இருக்கிறார். கருணாநிதிக்கு இவர்தான் இந்தி உரைகளை மொழி பெயர்த்து கூறுவார்.

கனிமொழி அதிலும் இந்தி உரைகளை தமிழில் மொழிபெயர்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர்கள் வீட்டில் மட்டும் எல்லோரும் இந்தி பேசலாம். ஆனால் மக்கள் இந்தி பேச கூடாது என்று நினைக்கிறார்கள். டெல்லி தலைவர்கள் உடன் இவர்கள் நெருக்கமாக இருக்க இந்திதான் காரணம், என்று தமிழருவி மணியன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamilaruvi Maniyan Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment