/indian-express-tamil/media/media_files/2025/10/29/stalin-vijay-seeman-2-2025-10-29-19-20-09.jpg)
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.” என்று தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) அடுத்ததாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை (27.10.2025) அறிவித்தது.
இதைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூடத்திற்குப் பின் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்யத் தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றம்சாட்டினார். இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும்.
இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 - ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.” என்று தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி தி.மு.க தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க விஜயின் த.வெ.க-வுக்கும் சீமானின் நா.த.க-வுக்கும் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், பா.ஜ.க கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-வுக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு பனையூர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தி.மு.க அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தி.மு.க-வைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கும் எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பா.ஜ.க கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-வுக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us