Advertisment

ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல தி.மு.க அரசு: ஸ்டாலின் விளக்கம்

தி.மு.க அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. ஆன்மீகத்தை அரசியலுக்கும் சுயநலத்துக்கும் பயன்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுப்பது தான் தி.மு.க ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news

Tamil news updates

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் இன்று (அக்டோபர் 5) நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விழா தொடங்கி வைத்தார். வள்ளலார் இவ்வுலகுக்கு வருகை தந்து 200வது ஆண்டு தொடக்க விழா, வள்ளலார் தருமசாலை தொடங்கிய 156 வது ஆண்டு விழா, வள்ளலார் ஜோதி தரிசனம் 152வது ஆண்டு விழா என்ற வகையில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்றது.

Advertisment

விழாவில் ஸ்டாலின் சிறப்பு தபால் உறை, லோகா, சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "அமைச்சர் சேகர்பாபு ஆன்மீக செயற்பாட்டாளர். கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்லும் அமைச்சர் சேகர்பாபு. கோயில்களில் நடைபெறும் அறப்பணிகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார். வள்ளலாரை போற்றுவது தி.மு.க அரசின் கடமை. வள்ளலார் பிறந்த நாளையொட்டி 1ஆண்டுக்கு அன்னதானம் வழங்கப்படும், வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். பசி பிணியை தடுத்த வள்ளலார் வழியில் நடக்கும் தி.மு.க அரசு, பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்து வருகிறது.

சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது. சமூக நல்லிணக்கம் வேண்டும். தி.மு.க அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது என சிலர் பரப்பி வருகிறார்கள். தி.மு.க அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. ஆன்மீகத்தை அரசியலுக்கும் சுயநலத்துக்கும் பயன்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுப்பது தான் தி.மு.க ஆட்சி. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து தி.மு.க அரசு செயல்படுகிறது" என்று பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment