திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயற்சி – மு.க ஸ்டாலின்

திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்கும் முயற்சி கனவிலும் நனவாகாது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DMK Rajya sabha member announced

திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்கும் முயற்சி கனவிலும் நனவாகாது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிகிழமை (ஜனவரி- 8), சென்னை ராயபுரத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு கையொப்ப பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் “சிலர் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்து மதத்தை  அரசியலாக்கப் பார்க்கின்றனர், அந்த அரசியல் தமில்நாட்டில் ஒரு போதும் எடுபடாது” என்றார்.

முன்னதாக, கழகக் குடும்ப திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், திமுகவை இந்து விரோதியாக சித்தரிப்பதால்,  எதிரிகளின் புகழ் அதிகரிக்காது என்று காட்டமாக தெரிவித்தார்.

படபிடிப்புக்கு செல்லும் போதெல்லாம் நடிகர் வீட்டின் முன்பு அவரிடம் கருத்து கேட்டு, அதை இரண்டு நாள் விவாதிக்கும் ஊடகங்கள்…..  முக்கிய சமூக பிரச்சனைகளை நினைத்து கவைப்பட வேண்டும் என்றும், அந்த பிரச்சனைகளுக்கு பதில்  தேட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லாமல் சொல்கிறேன் இந்த சட்டம் இஸ்லாம் சமூதாயத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார்.

மக்களவை உறுப்பினர் கனிமொழி இதே கருத்தை இன்று முன்வைத்தார். குடியுரிமை திருத்தம் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது.

இஸ்லாம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் முதல் ஆளாக வருவேன் என்று ரஜினி காந்த் கூறுகிறார், அனால் ஏற்கனவே அவர்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன்ர். பெங்களூரில் சுமார் 300 வீடுகள் தகர்க்கப்பட்டப்போது  ரஜினிகாந்த் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk is not an anti hindu party stalin

Next Story
ரயில்வே தனியார் மயம்: முக்கியத்துவம் பெறுமா தாம்பரம் ரயில் நிலையம் ?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com