CAA kolam , Anti CAA Kolam, No to CAA , stalin anti CAA kolam , NRC kolam, kaniomozhi anti CAA NRC kolam
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், சென்னை பெசண்ட் நகரில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோலமிட்ட 6 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
Advertisment
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
இதுகுறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “அவர்கள் கோலம் போட்டதற்காக கைது செய்யப்படவில்லை. கோலத்தின் மூலம் எதிர்ப்புகளை பதிவு செய்ததால்தான் கைது நடவடிக்கை நடந்திருக்கும்” என்று கூறினார். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
Advertisment
Advertisements
தமிழ்நாடு காவல்துறையின் இந்த செயலை கண்டித்து,திமுக மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழி நேற்று தனது ட்விட்டரில், " நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்" என்று பதிவிட்டார்.
இன்று மீண்டும் தனது ட்விட்டரில், எங்கள் வாசலில்... என தன் வீட்டின் வாசாலில் 'வேண்டாம் - CAA, NRC' என்று போடப்பட்டிருந்த கோலத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
கனிமொழி இல்லத்தின் முன்பு போடப்பட்ட கோலம்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் , அவரின் ஆழ்வார்பேட்டை வீட்டிலும் 'வேண்டாம் - CAA, NRC' என்ற போடப்பட்ட கோலத்தின் புகைப்படத்தை வெளியிட்டார்.
முன்னதாக , கிரேஸ் பானு என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எந்த வழியிலேனும் நாங்கள் விஷத்தனமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.. ரங்கோலி நம்முடைய கருவி” என்று குறிப்பிட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.