72 வயது பொன்முடியை விடிய விடிய விசாரிப்பதா? தி.மு.க எதிர்ப்பு: இன்று மீண்டும் ஆஜராக இ.டி சம்மன்

அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் சரவணன் கூறுகையில் ’அமலாக்கத்துறை அலுவலகமா சித்திரவதை கூடமாக எனத் தெரியவில்லை ’ என்று விமர்சித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் சரவணன் கூறுகையில் ’அமலாக்கத்துறை அலுவலகமா சித்திரவதை கூடமாக எனத் தெரியவில்லை ’ என்று விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
72 வயது பொன்முடியை விடிய விடிய விசாரிப்பதா?

72 வயது பொன்முடியை விடிய விடிய விசாரிப்பதா?

அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை செய்யப்பட்டது  தொடர்பாக வழக்கறிஞர் சரவணன் கூறுகையில் ’அமலாக்கத்துறை அலுவலகமா சித்திரவதை கூடமாக எனத் தெரியவில்லை ’ என்று விமர்சித்துள்ளார்.

Advertisment

நள்ளிரவு 3.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பாக திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டியளித்தார். ” காலை 10 முதல் இரவு 3.30 மணி வரை வைத்திருந்து விசாரணை என்று சொல்லி சித்திரவதை செய்கின்றனர். அவருக்கு வயது 72 . ஏற்கனவே அவரின் உடல் நிலையில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அமலாக்கத்துறை மனிதாபிமானமற்ற செயலை செய்கிறது. வெளியே காத்திருந்த நமக்கே சோர்வாக இருக்கிறது. அவருக்கு இந்த விசாரணை எப்படி ஒரு மன உளச்சலை கொடுத்திருக்கும். 2007 நடந்த வழக்கிறகு 2023-ல் விசாரணை செய்கிறது அமலாக்கத்துறை. அப்படியென்றால், விசாரணையை காலையில் வைத்திருக்கலாம்.  ஏன் அவசரமாக விசாரிக்க வேண்டும்.  அமலாக்கத்துறை அலுவலகமா சித்திரவதை கூடமாக என்று தெரியவில்லை. திமுக அமைச்சர்களின் 20 வருடங்களுக்கு முன்பாக உள்ள வழக்குகள்தான் கண்களுக்கு தெரிகிறதா? 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

விசாரணையை முடித்துவிட்டு பொன்முடி தற்போது சென்றிருக்கிறார். மீண்டும் இன்று மாலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆளுநரை தொடர்ந்து விமர்சித்து வந்ததால்தான் ;பொன்முடிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. துணை வேந்தர் நியமனம், புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு என்று பல்வேறு விதத்தில் அவர் ஆளுநரை எதிர்த்து வந்தார். ஆளுநர் ஒரு வாரம் டெல்லிக்கு சென்றுள்ளார். அடுத்த வாரம் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை வந்து நிற்கிறது. 2007 நடந்த வழக்கிற்கு தற்போது எப்படி ஆதாரம் தேட முடியும். அப்படி தேடினாலும் கிடைக்குமா?

அமலாக்கத்துறை கேட்ட எல்லா கேள்விகளுக்கும், பொன்முடி பதிலளித்தார். அமலாகத்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விசாரணையின்போது வெளிப்படும் உண்மைகளை அமலாக்கத்துறை இதுவரை சமர்பிக்கவில்லை. இதனால் கூடிய விரைவில் மக்கள் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வார்கள். வட நாட்டு ஊடங்களில்தான் பொய்யான தகவல் பரவும். தற்போது தமிழகத்திலும் இது அதிகரித்துள்ளது. அமலாக்கத்துறை பரிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டால், அப்போது வந்து கேளுங்கள், அதற்கு பதிலளிப்பேன்.

Advertisment
Advertisements

2024ம் தேர்தலுக்காக, இப்படிபட்ட  ஒரு மிரட்டலை நடத்த முயற்சி செய்கிறார்கள். சட்டரீதியாக இந்த வழக்கை சந்திப்போம்” என்று அவர் கூறினார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: