கருணாநிதியின் மறைவையொட்டி அவரது வரலாற்றுத் தடங்களை பதிவு செய்கிறது ஐஇ தமிழ்!
Advertisment
கருணாநிதி மேடையில் கரகரத்த குரலில் முழங்கினால், குழுமியிருக்கும் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கும்.தனது பேச்சின் மூலம் ஒரு பெரும் கூட்டத்தைத் தம் பக்கம் திருப்பி வைத்திருந்தவர் கருணாநிதி.
கலைஞர் கருணாநிதியன் பேச்சுக்கு அவர் மட்டுமே நிகர் என்கின்ற அளவில் கலைநயமும், கவிதைத்துவமும், ஆழ்ந்த அரசியலும், நகைச்சுவையும் ஒருசேர இருப்பது, அரசியலையும் தாண்டி எல்லாரையும் எளிதில் வசீகரித்துவிடும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும். ஏனெனில், எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கருணாநிதியின் பேச்சு மொழி பிடிக்கும்.
கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார். அன்று தொடங்கிய அவரின் பேச்சு எத்தனையோ மேடைகளை கண்டு விட்டு இன்றும் அசராமல் ஒலித்து வருகிறது.
கலைஞர் எந்த மேடையில் பேசினாலும் அதில் மறக்காமல் தமிழ்ப் பற்று, திராவிட உணர்வு, சாதி ஏற்றத் தாழ்வின்மை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூக செயல்பாடுகள் குறித்து கண்டிப்பாக பதிவு செய்து விடுவார். கலைஞரின் மேடை பேச்சை கேட்கவே திரளான கூட்டம் கூடும். கைத்தட்டல்களும், விசில் சத்தங்களும் அரங்கத்தையே ஆட்டி வைக்கும். அரசியலில் இல்லாத சினிமா பிரபலங்கள் கூட கலைஞரின் மேடை பேச்சை கேட்க கூட்டத்திற்கு வருவார்கள். இப்படி காலத்தை கடந்து ஒலித்து கொண்டிருக்கும் கருணாநிதியின் மேடைப் பேச்சுகள் உங்கள் பார்வைக்கு..
1. 1986 செப்டம்பர் 15 ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெற்ற முப்பெரும் விழா கவியரங்கில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய தலைமை கவிதை.
2.
3. 1987 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலைஞரின் பேச்சு