கருணாநிதி உடல்நிலை: திடீர் வதந்தி கிளப்பும் விஷமிகள், மு.க.ஸ்டாலின் அறிக்கை

dmk chief m Karunanidhi health live updates: கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் வதந்தி பரப்புவதாகவும், தொண்டர்கள் அதை நம்பவேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.

By: Updated: July 27, 2018, 07:48:45 PM

M Karunanidhi health: கருணாநிதி உடல்நலம் குறித்து அறிய கோபாலபுரம் இல்லத்தில் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, திமுக தொண்டர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குவிகிறார்கள்.  கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் வதந்தி பரப்புவதை நம்ப வேண்டாம் என மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டார்.

கருணாநிதி, தமிழ்நாடு அரசியலின் மைய நீரோட்டமாக சுமார் அரை நூற்றாண்டு காலமாக இயங்கி வருபவர்! அவர் வயோதிகம், சிறுநீரக பாதையில் நோய் தொற்று மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். அவரது கோபாலபுரம் இல்லத்தில் மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதியின் உடல்நிலை ஜூலை 26 வியாழன் இரவில் சற்றே மோசமானதாக கிடைத்த தகவலை அடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரம் வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியை நலம் விசாரித்தனர். கமல்ஹாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன் ஆகியோரும் அடுத்தடுத்து வந்து நலம் விசாரித்தனர்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து திமுக தொண்டர்கள் பெருமளவில் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்திருக்கிறார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கோபாலபுரம் வருகை தந்து உடல் நலம் விசாரித்தபடி இருக்கிறார்கள்.

m karunanidhi, dmk, tamil nadu, karunanidhi health, karunanidhi ill, m k stalin, india news, tamil nadu news, m karunanidhi live updates dmk cheif m karunanidhi health live updates: கருணாநிதி உடல் நிலையை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் கவலையுடன் குவிந்த பொதுமக்கள்

DMK Chief M Karunanidhi Health Latest News in Tamil, கருணாநிதி உடல் நலம் பாதிப்பு Live Updates:

7:40 PM: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் வெளியிட்ட செய்தியில், ‘நாடே போற்றும் நல்ல தலைவர் கருணாநிதி. அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். நானும் முகுல் வாஸ்னிக்கும் நாளை சென்னை வருகிறோம்’ என கூறியிருக்கிறார்.

7:00 PM: கருணாநிதி உடல்நிலை குறித்து பகலில் பேட்டி மூலமாக விளக்கம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் இரவு 7 மணிக்கு இன்னொரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்திகளை தொண்டர்கள் நம்ப வேண்டாம். விஷமிகள் திட்டமிட்டு வதந்திகளை பரப்புவதை செவிமடுக்க வேண்டாம். தொண்டர்கள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார் ஸ்டாலின்.

6:00 PM: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் அடுத்தடுத்து கோபாலபுரம் வந்து கருணாநிதி உடல்நலத்தை விசாரித்தனர்.

5:30 PM:  கருணாநிதி நலம் பெற வேண்டி கோபாலபுரம் இல்லத்தின் முன்பு கூடிய பெண்கள் சிலர், உருக்கமாக இறை வேண்டுதல் செய்தனர்.

5:00 PM: கருணாநிதியை நலம் விசாரிக்க நடிகை குஷ்பூ, கோபாலபுரம் வந்தார். நடிகர் ஆனந்தராஜூம் வருகை தந்தார்.

4:45 PM : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘கருணாநிதி விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாகவும், நேரில் சென்று நலம் விசாரிக்க இருப்பதாகவும்’ குறிப்பிட்டார்.

m karunanidhi, dmk, tamil nadu, karunanidhi health, karunanidhi ill, m k stalin, india news, tamil nadu news, m karunanidhi live updates dmk cheif m karunanidhi health live updates: கருணாநிதி உடல் நிலையை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த மு.க.அழகிரி

4:30 PM : டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, ‘மருத்துவமனையில் உள்ள வசதிகளை வீட்டிலேயே வைத்து கருணாநிதிக்கு சிகிச்சை அளிப்பதாகவும், அவரது உடல்நிலையில் மாற்றம் இருப்பதாகவும்’ தெரிவித்தார்.

4:15 PM : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, கோபாலபுரம் வந்தார்.கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார்.

3:30 PM: கோபாலபுரம் இல்லத்தின் முன்பு திமுக தொண்டர்களின் கூட்டம் குறையவில்லை. அவர்கள், ‘கலைஞர் வாழ்க’ என கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

m karunanidhi, dmk, tamil nadu, karunanidhi health, karunanidhi ill, m k stalin, india news, tamil nadu news, m karunanidhi live updates dmk cheif m karunanidhi health live updates: கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் குறித்து பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்

2:40 PM: கருணாநிதியின் உடல்நிலை குறித்து முக்கிய தகவலை கோபாலபுரம் இல்லம் அருகே செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ‘கருணாநிதிக்கு ஏற்பட்ட காய்ச்சல் குறைந்து கொண்டிருக்கிறது. நோய் தொற்றும் குறைந்து கொண்டிருக்கிறது. எனவே அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது’ என்றார்.

2:30 PM: கருணாநிதி உடல் நலம் விசாரிக்க நாளை துணை குடியரசுத் தலைவர் வர இருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

2:00 PM: கருணாநிதி நலம் பெற சமூக வலைதளங்களில் பிரபலங்கள், திமுக அபிமானிகள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் பதிவுகளை இட்டு வருகிறார்கள். இதனால் கருணாநிதியின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

1:35 PN: மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் செய்தியில், தன்னை தொடர்புகொண்டு நலம் விசாரித்த ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

1:30 PM: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததற்கு நன்றி தெரிவித்தார். உதவி செய்யத் தயாராக அவர்கள் கூறியதை குறிப்பிட்ட ஸ்டாலின், தற்போது கருணாநிதிக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் விரைவில் மீண்டு வந்து அவரே நன்றி தெரிவிப்பார் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

1:00 PM: முன்பு திமுக.வில் இயங்கியவரான இயக்குனர் டி.ராஜேந்தர் வருகை தந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

12:30 PM : கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லம் வந்தார். கருணாநிதியை அவர் நேரில் சென்று பார்த்ததாக தெரிய வந்தது.

கருணாநிதி உடல்நலம் பாதிப்பு: கோபாலபுரம் வீட்டிற்கு அணிவகுத்த கட்சி தலைவர்கள்! To Read, Click Here

‘காய்ச்சல் இருக்கிறது. நோய்த் தொற்று இருக்கிறது. ஆனாலும் ஆபத்து இல்லை’: கருணாநிதி ஹெல்த் ரிப்போர்ட்

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் முதல்முறையாக அதிமுக தலைவர்கள்: ‘கலைஞர் நன்றாக இருப்பதாக’ பேட்டி

12:00 PM: பாஜக தமிழக தலைவர் தமிழிசை, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் வந்து நலம் விசாரித்தனர்.

11:30 PM : காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் நலம் விசாரித்தனர்.

11:10 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

m karunanidhi, dmk, மு.கருணாநிதி, கருணாநிதி உடல்நிலை, கோபாலபுரம் இல்லம், திராவிட முன்னேற்றக் கழகம் dmk chief m Karunanidhi health live updates: கருணாநிதி நலம் விசாரிக்க வந்த வைகோ

10:50 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை.

10:15 AM: சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்  வேல்முருகன் வருகை தந்துள்ளார்.

m karunanidhi, dmk, மு.கருணாநிதி, கருணாநிதி உடல்நிலை, கோபாலபுரம் இல்லம், திராவிட முன்னேற்றக் கழகம் dmk chief m Karunanidhi health live updates: கருணாநிதி நலம் விசாரிக்க வந்த வேல்முருகன்

 

10:00 AM : “திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் உடல்நலம் பெற்று மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி அரசியல் பணிகள் செய்ய பிரார்த்திக்கிறேன்”  என்று தேமுதிக தலைவர்  விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

9:45 AM: திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை நேற்றிரவு  தனது வீட்டிற்கு சென்றிந்த ஸ்டாலின் தற்போது மீண்டும் கோபாலபுரம் வந்துள்ளார்.

9:00 AM:   திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு காவேரி மருத்துவமனை மருத்துவக்குழு வருகை.

9:00  AM:  “திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் ”  என்று  நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

9:00 AM: சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு குடும்ப மருத்துவர் கோபால் வருகை.

8:40 AM : மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8:30 AM: கோபாலபுரம் இல்லத்தை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil Nadu Ex Chief Minister, DMK Chief M Karunanidhi Health Latest News:

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk leader karunanidhi health updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X