அண்ணா அறிவாலயத்திற்கு 3 மாதங்களுக்கு பின்பு, கருணாநிதி வருகை!

கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனு ரஞ்சித்துக்கும், சென்னைக் கோபாலபுரத்தில் திருமணம் நடைப்பெற்றது

திமுக தலைவர் கருணாநிதி, 3 மாதங்களுக்கு பின்பு, நேற்று(18.9.18) திடீரென்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அவரைக் கண்ட தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கோபாலபுரத்திலுள்ள, தனது இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். கடந்த பத்து மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தை விட்டு வெளியே செல்வதும் முழுவதுமாகக் குறைந்திருந்த அவர், தற்போது உடல்நலம் தேறி உற்சாகத்துடன் காணப்படுகிறார்.

சமீபத்தில்,மு.க.தமிழரசுவின் பேரனைப் பார்த்து கருணாநிதி சிரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதன் பின்பு, கடந்த அக்டோபர் 19-ம் தேதி, சென்னைக் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வருகை புரிந்தார். அவரைக் காண திமுக தொண்டர்கள் பலர் கூடியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும், கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனு ரஞ்சித்துக்கும், சென்னைக் கோபாலபுரத்தில் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். அவரின் உடல் நலம் முழுவதுமாக தெறி வருவதை திமுக தொண்டர்கள் கொண்டாடினர்.

பின்பு, நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும், கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனு ரஞ்சித்துக்கும், சென்னைக் கோபாலபுரத்தில் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம், கருணாநிதி, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு திடீர் வருகை தந்தார். மூன்று மாதங்களுக்கு பின்பு அண்ணா அறிவாலயத்திற்கு வரும் அவரை, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். கருணாநிதியின் இந்த வருகை, தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 

×Close
×Close