Advertisment

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் உதவியாளர் படுகொலை : பெங்களூரு போலீசார் விசாரணை

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் மூத்த தலைவர்களின் ஒருவருமான மு.க.அழகிரியின் உதவியாளர் வி.கே குருசாமி பெங்களூருவில் ஒரு உணவகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்

author-image
WebDesk
New Update
DMK MK Alagari

தி.மு.க.வின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான மு.க.அழகிரியின் உதவியாளர் படுகொலை

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மு.க.அழகிரியின் உதவியானர் பெங்களூருவில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில்ஆளும் கட்சியான திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த இவர் தற்போது அரசியலில் இருந்து விலகி மதுரையில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரிடம் உதவியாயளராக வி.கே.குருசுவாமி (55) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று முன்தினம் (செப்டம்பர் 3) மதுரையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், பெங்களூருவின் பானஸ்வாடி பகுதியில் குடியிருப்பு ஒன்றை தேடுவதற்காக ஒரு தரகருடன் பேசியுள்ளார். பனஸ்வாடி அருகே உள்ள சுக் சாகர் ஹோட்டலில் தனது நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கருடன் ஹோட்டலில் தேநீர் அருந்திக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென ஹோட்டலில் புகுந்த ஆயுதம் ஏந்திய 5 பேர் குருசுவாமியை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் குருசுவாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் பலத்த காயங்களுடன் தப்பினார். ஆனாலும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குருசுவாமி ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்து ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். நகரத்தில் முக்கிய இடமாக பானஸ்வாடி பகுதியில் ஒரு குடியிருப்புக்காக வேண்டி ஒரு தரகருடன் தேநீர் அருந்தியபடி பேசிக்கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளர்.

மேலும் காவல்துறையின் துணை ஆணையர் (கிழக்கு) பீமாசங்கர் எஸ் குலேத் கூறுகையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்து தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ளனர். நாங்கள் ஏற்கனவே இரண்டு குழுக்களை மதுரைக்கு அனுப்பியுள்ளோம், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “குரு சுவாமி மதுரையில் ஒரு பிரபலமான நபராக இருந்துள்ளார். ரவுடி ஷீட்டர்என்ற பெயருடன், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அட்டாக் பாண்டிஎன்ற எம் ராஜபாண்டியனுடன் இவருக்கு பகை இருந்துள்ளது. அதே சமயம் குருசுவாமி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Mk Alagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment