/tamil-ie/media/media_files/uploads/2020/04/b628.jpg)
dmk leader mk stalin conversation with 1 rs idly paati ondrinaivom vaa covid
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ''ஒன்றிணைவோம் வா'' என்ற செயல்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிலருடன் நாள்தோறும் காணொலி வாயிலாக பேசி வரும் ஸ்டாலின், லாக்டவுனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.
தினம் கிட்டத்தட்ட 50 பேருடன் காணொலி மூலம் பேசும் ஸ்டாலின், உங்களுக்கு சரியாக உதவிகள் கிடைக்கிறதா, உடல் நலம் எப்படி இருக்கிறது என்று விசாரித்து, தேவையின்றி வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் உங்களுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும் எனவும் ஆறுதல் வார்த்தை கூறி வருகிறார்.
அதிமுக கொரோனா நிவாரண களேபரம்: இதையெல்லாம் மத்தியக் குழு பார்க்க மாட்டாங்களா
அதன்படி, கோவையைச் சேர்ந்த பிரபல 'இட்லி பாட்டி' கமலாத்தாளிடம் ஸ்டாலின் வீடியோ கால் மூலம் பேசினார்.
கோயம்பத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான இவர் எந்தவித இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் உரல்களில் அறைத்து உணவு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பஞ்சு போன்ற இட்லி, சூடான சாம்பார் மற்றும் காரமான சட்னியை வெறும் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், கமலாத்தாள் பாட்டியிடம் பேசிய ஸ்டாலின், உங்களுக்கு என்ன நிவாரணம் கொடுத்தார்கள் என்று கேட்டறிந்தார். மேலும், உங்களுக்கு என்ன வயதாகிறது என்றும், எத்தனை பிள்ளைகள் என்றும் விவரம் கேட்டறிந்தார்.
அதற்கு கமலாத்தாள், எனக்கு 85 வயதாகிறது என்றும், அரிசியும், பணமும் கொடுத்தார்கள் என்றும், என் வீட்டில் பசங்க இருக்கிறார்கள் என்றும் பதிலளிக்க, அனைத்தையும் கேட்டுக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.