டெல்லியில் மெகா கூட்டணி குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
ஸ்டாலின் உடை:
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை சட்டை வேட்டி அல்லது அவர்களின் கட்சிக்கு ஏற்ப கரை வேட்டி உடுத்துபவர்கள் தான் அதிகம். பெரும்பாலும் அரசியல்வாதிகள் என்றாலே அவர்களின் உடையை வைத்து தான் பலரும் அடையாளம் காண்பார்கள்.
இளம் அரசியல்வாதிகள் கூட வேட்டி சட்டை உடுத்துவதை கவுரமாக பார்க்கின்றன. இதிலிருந்து சற்று மாறுதலாக தெரிகிறார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ஸ்டாலின் ஜீன்ஸ்பேண்ட், டிசர்ட் என கலக்கி இருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் நடைப்பெற்ற மெகா கூட்டணி குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக திரளும் மெகா அணி குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி பல்வேறு விஷயங்கள் கலந்து யோசிக்கப்பட்டனர். பொதுவாகவே டெல்லி அரசியல்வாதிகள் குளிர்காலத்திற்கேற்ப உடை அணிவார்கள். அதைப் போலவே ஸ்டாலினும் 2 தினங்களாக டி- சர்ட், ஸ்வேட்டர் என கலக்கினார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/higher-education-9.jpg)
டெல்லி கூட்டத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ மத்தியில் நடைபெறும் பாசிச, மதவெறி பிடித்த மோடி தலைமையிலான ஆட்சியை அப்புறப்படுத்த மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி காங்கிரஸ் தலைமையில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குன சமுதாய மக்கள், சிறுபான்மையினர், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதையும் பற்றி விவாதித்தோம். விரிவான பொருளாதார வளர்ச்சி பற்றி பேசப்பட்டிருக்கிறது. எழுத்து உரிமை, பேச்சு உரிமை, அதற்குரிய சுதந்திரம் எல்லாம் இந்த மோடி அரசில் பறிக்கப்பட்டுள்ளது.” என்றார்.