Advertisment

இந்தி குறித்து அமித்ஷா ட்வீட்.. திரும்ப பெற வலியுறுத்தி மு.க ஸ்டாலின் அறிக்கை!

தி.மு.கழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk leader mk stalin statement

dmk leader mk stalin statement

dmk leader mk stalin statement : ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்ற கருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இந்தி தினம் கொண்டாடப்படுவதையடுத்து மோடி, அமித் ஷா உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே நாடு , ஒரே மொழி என்ற தலைப்பில் தன்னுடையை கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில்“நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் இந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி. இந்தி மொழியே இந்தியாவை ஒன்றிணைக்க உதவும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்ட குரலை பதிவு செய்து திமுக சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

"இந்தி மொழியை எப்படியாவது தமிழகத்திற்குள் திணிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு முயற்சி செய்கிறது.நமது அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேறுபாடுகள் நிறைந்த மாநிலங்கள் ஒன்றி இணைந்திருக்கும் இந்த பன்முகத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய வலிமை. ‘வேற்றுமையில் ஒற்றுமை’என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம்.

பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது.அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல; கடும் கண்டனத்திற்குரியதுமாகும்.

இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். பிரதமர் மோடி அவர்களும் இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.இல்லையெனின், தி.மு.கழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க தி.மு.கழகம் தயங்காது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Mk Stalin Dmk Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment