தன்னுடைய தலைவர் மீது தாக்குதல் நடந்தபோது அமைதியாக இருந்தவருக்கு தத்துவம் ஏது? விஜய் மீது ராஜீவ்காந்தி தாக்கு

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு, வெளிநாட்டுக் கனவுகள் உள்ளது, ஆனால் வட இந்தியாவுக்கு போகும் கனவுகள் ஒருபோதும் இல்லை; கோவையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் ராஜீவ் காந்தி பேட்டி

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு, வெளிநாட்டுக் கனவுகள் உள்ளது, ஆனால் வட இந்தியாவுக்கு போகும் கனவுகள் ஒருபோதும் இல்லை; கோவையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் ராஜீவ் காந்தி பேட்டி

author-image
WebDesk
New Update
rajiv gandhi

தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:-

Advertisment

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சனாதனத்தை பற்றி துணை முதல்வர் பேசி இருந்தார், அது ஒட்டு மொத்த இந்து மதத்தை புண்படுத்தி விட்டது என பிரச்சாரம் செய்தார்கள். புதிய கல்விக் கொள்கை என்ற, திணிப்பை தற்போது பா.ஜ.க கையில் எடுத்து உள்ளது. கொங்கனி, மைதிலி, போஜ்புரி, போன்ற மொழி பேசக் கூடிய மக்கள் வாழும் இடங்களில் இந்தியை திணித்ததால் பள்ளிப் படிப்பை கூட முடிக்க முடியாமல், தமிழ்நாட்டை நோக்கி கூலி வேலைக்கு வருகிறார்கள். அதே போல தமிழக இளைஞர்களையும் அவல நிலைக்குத் தள்ள, மோடி பா.ஜ.க அரசு முயல்கிறது என்று கூறினார்.

விஜய் வெளியிட்டு இருக்கும் அறிக்கை குறித்த கேள்விக்கு, அன்புச் சோலைகள் என்ற கருத்தை நக்கல் நையாண்டி செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு விஜயின் தந்தை என் மகன் என்னை பராமரிக்கவில்லை என எல்லா மீடியாக்களிலும் கூறிக் கொண்டு இருந்தார். தன் மகனாளையே தான் பராமரிக்கப்படவில்லை என்று திட்டு வாங்கியவர் தான் விஜய். அவருக்கு தமிழ்நாட்டினுடைய தாய்மார்கள் தந்தையர்கள், குரல் தெரியாது. அவர் ஒரு அறிக்கை எழுத வேண்டுமே என்பதற்காக மட்டுமே எழுதி இருக்கிறார்.

வெங்கையா நாயுடு போன்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் உடைய நிலையை புரிந்து கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டின் முகமாக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், தந்தை பெரியார் மீதும் பேரறிஞர் அண்ணா மீதும் கலைஞர் மீதும் தீராத வன்மத்தோடு இருக்கிறார். அதனால் மோடியிடமும், ஆர்.எஸ்.எஸ் இடமும் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யக் கூடாது என்று கூறுகிறார். அவர் தயாரித்த பட்ஜெட்டில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் இல்லை. அப்பொழுது மரியாதைக்குரிய விஜய் எங்கு தூங்கிக் கொண்டு இருந்தார் என தெரியவில்லை. ஆனால் இன்று பாய்சனுக்கும் பாயசத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதிக் கொண்டு இருக்கிறார். முதல்வர் பள்ளிகள் கல்லூரிகளுக்கு என்ன செய்து இருக்கிறார் என்று உலகறியும். தான் இருப்பை காட்டுவதற்காகவே அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் விஜய் என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறினார். 

Advertisment
Advertisements

விஜயின் பின்னால் அதிக இளைஞர்கள் இருப்பதை பார்க்க முடிகிறதே என்ற கேள்விக்கு, விஜய்யின் படத்தை போட்டால் கூட நானும், நீங்களோ ஆச்சரியமாக தான் பார்ப்போம். அவர் தலைவராக இருப்பதற்கு என்ன கருத்தியல் இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. வெறும் புகைப்படங்களை வைத்தால் மட்டும் பத்தாது அவர்களுடைய தத்துவங்கள் என்ன என்பதை காட்ட வேண்டும். 

அதேபோல சீமான் மன இறுக்கத்திற்கு ஆளாகி தந்தை பெரியாரை பேசியபோதெல்லாம் விஜய் வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருந்தார். தன்னுடைய தலைவர் மீது தாக்குதல் நடத்தும் போது அமைதியாக இருப்பவர் எல்லாம் எப்படி தத்துவம் வைத்துக் கொள்ள முடியும். இதைப் பார்க்கிற இளம் தலைமுறையினர் விஜய் நடிகராக ரசிப்பார்கள். இந்தியை மட்டுமே தாய் மொழியாக கொண்ட இந்தியை வளர்க்கிற, நடிகர்கள் மட்டுமே வளர்ந்து இருப்பார்கள். ஆனால் ஏன் உ.பி.,யிலிருந்தும், பீகாரில் இருந்தும் வந்த நடிகர்கள் வளரவில்லை., காரணம் இந்தி அவர்களை தின்று விட்டது. 

ஆனால் தமிழ்நாட்டில் நடிகர் விஜய், அஜித் போன்றவர்கள், சாமானிய வீட்டு பிள்ளைகள் நடிகர்களாக வளர்கிறார்கள் என்றால் தமிழ் சினிமா வளர்ந்து இருக்கிறது. தமிழ் சினிமா வளர்வதற்கு விதை போட்டவர் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் அண்ணா. கலைஞர் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கலைஞர்களை விட அதிக சம்பளம் வாங்கியவர். தமிழ் சினிமாவை வளர்த்த திராவிட இயக்கத்தை பார்த்து இவர் குறை சொல்லுகிறார். அப்படிப்பட்ட திராவிட கழகத்தையும், பா.ஜ.க.,வையும் ஒப்பிட்டு குறை கூறுகிறார். 

ஏறி வந்த ஏணி, எதுவென்று உற்றுப் பார்க்க வேண்டும். சினிமா சாதி மொழி மதம் பார்க்காமல் வளர்ந்து வந்ததற்கு விதை போட்டதே திராவிட கழகம் தான். திராவிட இயக்கத்தின் மீது இப்படி ஒரு விமர்சனம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதையெல்லாம் திராவிட இயக்கம் கலைத் துறையில் செய்து இருக்கும் சாதனையாக தான் நாங்கள் பார்க்கிறோம். 

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி முறைகேடு என்று செய்திகள் வந்து இருக்கிறது என்ற கேள்விக்கு, ஆயிரம் கோடி ரூபாய் என்று அண்ணாமலை நேற்று அதிகமே போட்டுவிட்டார். கமலாலயமும், அமலாக்கத்துறையும் ஒன்றாக இருப்பதாக எங்களுக்கு தோன்றுகிறது. அறிக்கையை இ.டி வெளியிடுவதற்கு முன்பே, அண்ணாமலை வெளியிடுகிறார். அண்ணாமலை தன்னுடைய பிரமோஷனுக்காக இப்படி எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார். எங்களுடைய பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த முறைகேடும் நடக்கவில்லை என தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் என்று கூறினார். 

அண்ணாமலை தி.மு.க.,வின் நிதி நிலை அறிக்கை வெற்றுக் காகிதம் காகிதம் என்று கூறியிருக்கிறார் என்று கேள்விக்கு, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பார்த்தோமானால், ரூபாய் நோட்டில் இந்தி இருந்த காலத்திலும் இந்தி இல்லாமல் இருந்த காலத்திலும், அந்த காலத்தில் ரூபாயின் மதிப்பும் டாலரின் மதிப்பும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்போது மன்மோகன் காலத்தில் டாலரின் மதிப்பு குறைக்க வேண்டும் என பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. டாலர் தற்போது தினம் ஒரு ரூபாய் விதம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. டாலரின் மதிப்பு உயர்வதால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. டாலர் விலை உயர்வதால் தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது. இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமிழ்நாட்டிற்கு ஒற்றை ரூபாய் கூட கொடுக்கவில்லை.

தென்னிந்தியாவை கடுமையாக வஞ்சிக்கிற மோடி அரசை, தமிழ்நாட்டின் பிரதிநிதியாக கேட்பதற்கு அண்ணாமலைக்கு வக்கு இல்லை. கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்று கூறிக் கொண்டு இருக்கிறார், டாலர் சிட்டி இன்று டல்சிட்டியாக மாறிவிட்டது, ஜி.எஸ்.டி கொண்டு வந்து சிறு, குறு தொழில்களை முற்றிலுமாக முடக்கி விட்டார்கள்.

கோவையின் கனவாக இருந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை. நாங்கள் இடம் ஒதுக்கியும் விமான நிலையம் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு விரோத செயல்களை செய்து விட்டு இன்று வளர்ந்த மாநிலங்களில், தனிமனித வளர்ச்சி இந்தியாவில் ஒட்டுமொத்த மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. கடன் வாங்கும் விகிதத்தில் குறைவாகத் தான் வாங்கி இருக்கிறோம்.

தன்னுடைய எஜமானர்களுக்கு தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே அண்ணாமலை போன்றோர் இப்படி நடந்து கொள்கிறார்கள். அண்ணாமலை செருப்பு போட மாட்டேன் என்று கூறினார், ஆனால் இன்று ஷூ அணிந்து கொண்டு இருக்கிறார். நம்மைப் போன்றவர்கள் ஏன் என்று கேட்காத காரணத்தால் தான் இது போன்றெல்லாம் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
அண்ணாமலையின் பொய்களிலேயே இங்கு புத்தகங்கள் வர தொடங்கி விட்டது. நாம் ஏதாவது கேள்வி கேட்க மாட்டோம் என்பதற்காக பிரஸ் மீட்டிங்குகளில் தினம் தோறும் ஒரு சவால் விட்டுக் கொண்டு இருக்கிறார். தன்னுடைய தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காகவே தினம்தோறும் ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், வெளிநாடு சென்றால் மூன்று மொழி படித்துத் தான் ஆகவேண்டும், விருப்பப்பட்டு யார் வேண்டுமானாலும் மூன்று மொழி படித்து கொள்ளலாம். எடுத்துக் காட்டுக்கு, கோவையில் இருந்து சென்னை செல்கிறோம் என்றால், சொகுசு பேருந்தும் இயக்கப்படும் அரசு பேருந்தும் இயக்கப்படும், அதற்கேற்ற விலையும் வசூலிக்கப்படும். அரசாங்க பேருந்துகள் சேவையோடு குறைந்த டிக்கெட்டில் இயக்கப்படுகிறது, ஆனால் தனி ஒரு மனிதனாக சொகுசு பேருந்து இயக்குபவர்களிடம் குறைந்த விலையை கேட்க முடியாது. அப்படி லாபம் சம்பாதிக்கும் தனியார் பள்ளிகளில் யார் வேண்டும் என்றாலும் கூடுதல் மொழி படிக்கலாம். அரசு பள்ளிகள் என்பது சேவை மனப்பான்மையோடு வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அந்த சேவையில் குறைபாடு இருந்தால் சுட்டிக் காட்டலாம். அதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், முதலமைச்சரும் சரி செய்வார்கள். 

ஆனால் இந்த சேவையை அம்பானி வீட்டுடன், ஆட்டோ  டிரைவரின் வீட்டை ஒப்பிட்டு பேசுவது போல செய்யக் கூடாது. தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு, வெளிநாட்டுக் கனவுகள் உள்ளது, ஆனால் வட இந்தியாவுக்கு போகும் கனவுகள் ஒருபோதும் இல்லை. அப்படி தேவை ஏற்பட்டால் அவர்களே மொழியை கற்றுக் கொள்வார்கள். இங்கு வரக் கூடிய இந்தி பேசும் இளைஞர்களும் ஒருபோதும் அவ்வையாரையும் ஆத்திசூடியையும், கற்றுக் கொள்வதற்காக வரவில்லை பிழைப்பதற்காக வருகிறார்கள். இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கிறார்கள் அல்லவா அதுபோல நம்முடைய மக்களும் அங்கு தேவைக்கு சென்றால் கற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.

கல்விக்கு தர வேண்டிய நிதியை கையெழுத்து போட்டால் தான் தருவோம் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, நான் இந்தியாவின் இறையாண்மை இலட்சணம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அடிப்படை கல்விக்காக, செஸ் வரியை பிரித்துக் கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் நீங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டால் நாங்கள் சொல்லும் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் நிதி வழங்குவோம் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

பி.ரஹ்மான், கோவை 

Dmk kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: