DMK leader Stalin calls OPS as ADMK Coordinator twitter splits: ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள நிலையில், இணையத்தளத்தில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவருகின்றன.
ஒற்றைத் தலைமை கோரிக்கையால் அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி – இ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது. மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க சிறப்பு பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: மு.க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து மா.சு. விளக்கம்
ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் அ.தி.மு.க கட்சிக்கு நான் தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வரும் ஓ.பி.எஸ், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.
யார் உண்மையான அ.தி.மு.க என்ற விவகாரம் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ஓ.பி.எஸ்-க்கு பின்னால் தி.மு.க இருப்பதாக இ.பி.எஸ் தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் விரைவில் குணமடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஸ்டாலின் அவருடைய பதிவில், ”கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்,” என ஓ.பி.எஸ்-ஐ அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டு இருந்தார். இது தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
ஒரு ட்விட்டர்வாசி, பூனை குட்டி வெளியே வந்துவிட்டது .. அதிமுகவில் இப்போது ஒருங்கிணைப்பாளர் பதிவு என்பதே இல்லை ....* *எங்கள் கட்சி பொதுக்குழு எடுத்த முடிவை அவமதித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனங்கள்*... *இதுபோல நாங்கள் செந்தில்பாலாஜியை திமுக தலைவர் என்று குறிப்பிட்டால் ஏற்றுக்கொள்வீரா ?? என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவர், அந்த கட்சிதான் ஓபிஎஸை நீக்கி விட்டதே பிறகு ஏன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடுகின்றீர்கள்? அதிமுக அலுவலகம் சீல் வைக்க திமுக உதவியது என்ற சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்திட்டு இருக்கீங்க போல முதல்வரே… என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டர்வாசி, அந்த கட்சி இப்ப யாரு கைல இருக்கு, தேர்தல் கமிஷன் நீதிமன்றம் முடிவு சொல்ற வரைக்கும் ஒருங்கிணைப்பாளர் தான். என பதிவிட்டுள்ளார்.
இன்னும் சில தலைவா வேற லெவல் அரசியல் என ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.