Advertisment

மு.க.ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இபிஎஸ், ஓபிஎஸ், சீனியர் அமைச்சர்களின் தொகுதிகளுக்கு குறி

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களுக்கு எதராக தனது புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
மு.க.ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இபிஎஸ், ஓபிஎஸ், சீனியர் அமைச்சர்களின் தொகுதிகளுக்கு குறி

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர்.  இதில் மூவருமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், மாநில அரசின் எதிர்ப்பை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் பல கிராமகளில் கிராமசபை கூட்டத்தை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Advertisment

மேலும் தனது பிரச்சார ஏவுகணைகளை அதிமுக அமைச்சர்கள் பக்கம் திருப்பி விட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை ஓ பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களின் கோட்டைகளை தகர்க்க முடிவு செய்துள்ளார். இதன் முன்னோட்டமாக பழனிசாமியின் எடப்பாடி (சேலம் மாவட்டம்) பன்னீர்செல்வத்தின் போடி (தேனி) குமாரபாளையம்-நமக்கல் (பி தங்கமணி), ராயபுரம்-சென்னை (டி.ஜெயக்குமார்) பாலாக்கோடு-தர்மபுரி (கே.பி. அன்பலகன்) விராலிமலை-புதுக்கோட்டை (சி. விஜயபாஸ்கர்) திருமங்கலம்-மதுரை (ஆர் பி உதயகுமார்) ஆகிய இடங்களில் மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.

மேலும் அதிமுக ஆட்சி குறித்து திமுக தலைவர்கள் கூறுகையில், அதிமுக ஆட்சியின் கூறப்படும் “தவறான செயல்களை” அம்பலப்படுத்தி வருகிறோம். ‘கமிஷன், ஊழல் மற்றும் வசூல்’ என்ற வாசகத்துடன் அனைத்து தொகுதிகளிலும் பல ஆண்டுகளாக அமைச்சர்களாக இருப்பவர்களில் ஊழலை அம்பலப்படுதும் பொறுப்பை எங்கள் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளர். இதில் பணத்தை செலவழிப்பதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று அதிமுக அமைச்சர்கள் நம்புகிறார்கள். எங்கள் தலைவர் அவர்கள் செய்த தவறுகளையும் ஊழலையும் அவர்களது தொகுதியிலேயே அம்பலப்படுத்தி வருகிறார். அவரின் இந்த செயல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் யாரும் முறையான பதிலை அளிக்கவில்லை ”என்று திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தைத் தவிர, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்று  தி.மு.க தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தாமதத்திற்கு  பன்னீர் செல்வம் தன்னை அதிமுக-வில் இணைத்துக்கொள்வதற்காக அவர் விதித்த முன் நிபந்தனைகளில் ஒன்று என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து காஞ்சீபுரம், வில்லுபுரம் மற்றும் ராணிப்பேட்டையில் ஆகிய இடங்களில், கிராமசபைக் கூட்டங்களை நடத்திய பின்னர்,  அதிமுக அமைச்சர்களின் தொகுதிகள் மீது தனது கவனம் செலுத்துவார் என தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மூன்று நாட்களில், தோண்டமுதூரில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன், கரூரில் எம்.ஆர்.ஜயபாஸ்கர், நன்னிலத்தில் ஆர்.காமராஜ் மற்றும் கடலூரில் எம்.சி.சம்பத் ஆகியோரை ஸ்டாலின் தனது பிரச்சாரத்தின் மூலம் கடுமையாக தாக்கினார்.

ஆனால் திமுகவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக முதலமைச்சர் மற்றும் சக அமைச்சர்கள் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் எதிர்கருத்து தெரிவித்து வருகன்றனர். இது குறித்து மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், ஊழல் குறித்து பேச திமுகவிற்கு எந்த அறுகதையும் இல்லை. திமுக ஆட்சியின் கீழ் வரலாற்று மின் தடை, மோசமான சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு பற்றி மக்கள் நன்கு அறிவார்கள். மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களை அவர்களால் வழங்க முடியவில்லை, ”என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Dmk Stalin Election Campaign
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment