Advertisment

7-வது முறை லோக் சபா எம்.பி; ப. சிதம்பரம் சாதனையை சமன் செய்த டி.ஆர். பாலு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு தமிழகத்தில் இருந்து ஏழாவது முறையாக நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு சென்ற 2வது எம்.பி என்ற சாதனை படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TR Baalu

தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு தமிழகத்தில் இருந்து ஏழாவது முறையாக நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு சென்ற 2வது எம்.பி என்ற சாதனை படைத்துள்ளார். 

Advertisment

தி.மு.க பொருளாளர், முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த தலைவர் டி.ஆர். பாலு, முதன்முதலில் 1996-ம் ஆண்டு சென்னை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றார் அதே தொகுதியில் போட்டியிட்டு 1991-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். 1998, 1999, 2004 தேர்தல்களில் சென்னை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 2008-ம் ஆண்டு  நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரை செய்யப்பட்ட பிறகு, 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாறி, அந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 5-வது முறையாக வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட டி.ஆர். பாலு, 2014-ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அனைத்து தி.மு.க வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். அதற்கு பிறகு, 2019-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர். பாலு வெற்றி பெற்று மீண்டும் மக்களவைக்கு சென்றார். டி.ஆர். பாலு 1986 முதல் 1992 வரை ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருந்துள்ளார். 

அதே போல, தமிழகத்தில் இருந்து 7 முறை மக்களவைக்கு சென்ற முதல் தலைவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆவார். 1984-ம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற ப. சிதம்பரம் மக்களவைக்கு சென்றார். 1989 மற்றும் 1991 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராகவும், 1996 மற்றும் 1998 தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியிலும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்தார்.

அதற்கு பிறகு, 1999 தேர்தலில் அதே சிவகங்கை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து, ப. சிதம்பரம் 2004 மற்றும் 2009 தேர்தல்களில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி ஆனார். இப்படி, ப. சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் 7 முறை வெற்றி பெற்று மக்களவைக்கு சென்ற முதல் உறுப்பினர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். 



இருப்பினும், ப. சிதம்பரம் 2014 முதல் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்தார். தற்போது, ​​இரண்டாவது முறையாக ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவர் முதலில் மகாராஷ்டிராவிலிருந்தும், பின்னர் தமிழ்நாட்டிலிருந்தும் மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், தி.மு.க பொருளாளர், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் 7 வது முறையாக மக்களவைக்கு செல்கிறார். இதன் மூலம், இதற்கு முன்னர் தமிழகத்தில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்று  7 முறை மக்களவை எம்.பி-யான ப. சிதம்பரத்தின் சாதனையை தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு சமன் செய்திருக்கிறார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tr Baalu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment