திமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் தமிழக நிதியமைச்சருமாக செயல்பட்டவர் க. அன்பழகன்.சில நாட்களுக்கு முன்பு , கீழ்பாக்கத்தில் இருக்கும் க.அன்பழகன் வீட்டில் இருந்து 11 பவுன் மதிப்புள்ள வளையல்கள் மற்றும் ப்ரேஸ்லெட் காணாமல் போனது. நகை காணாமல் போனதில் இருந்து, அங்கு வீட்டு வேலை செய்து வந்த நளினி என்ற பெண் மாயமானார்.
க. அன்பழகன் வீட்டில் திருட்டு
இதனைத் தொடர்ந்து அன்பழகனின் உதவியாளர் நடராஜன் தலைமை செயலக குடியிருப்பு காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளார். நளின் என்ற இளம் பெண் பிப்ரவரி 23ம் தேதியில் இருந்து உடல் நலக் குறைவு காராணமாக வேலைக்கு வரவில்லை என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவரை கடந்த வியாழக்கிழமை அன்று காவல் துறையினர் விசாரித்து உள்ளனர். சில கேள்விகள் கேட்டுவிட்டு, பின்பு அவரை விடுவித்துவிட்டனர். திருட்டு வழக்கு காரணமாகவும், காவல் துறை விசாரணை காரணமாகவும் விரக்தி அடைந்த அந்த பெண் ஞாயிற்றுக் கிழமை அன்று தூக்க மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால் அவருடைய சகோதரி தக்க நேரத்தில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். காவல்துறையினர் காணாமல் போன நகை தொடர்பாக சி.சி.டி.வி ஃபுட்டோஜை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென்மண்டல மாநாடு... மதுரை விரைந்தார் முக ஸ்டாலின்