scorecardresearch

ஒரே நாடு; ஒரே தேர்தல்: டெல்லியில் தி.மு.க கடும் எதிர்ப்பு

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு சட்ட ஆணையத்திடம் தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

DMK, One Nation, One Election, MK Stalin,

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு டெல்லியில் சட்ட ஆணையத்திடம் தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு அ.தி.மு.க ஏற்கனவே ஆதரவு அளித்திருந்தது. ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க கடும் எதிர்பு தெரிவித்து வருகிற்து.

இந்நிலையில், தி.மு.க எம்.பி பி வில்சன், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த கடிதத்தை டெல்லியில் சட்ட ஆணையத்திடம் திங்கள்கிழமை அளித்தார். இந்த கடிதத்தில் ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பதற்கு மு.க. ஸ்டாலின் விரிவான காரணத்தை கூறியுள்ளார். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரிமோட் வாக்களிக்கும் முறையை அனுமதிப்பது குறித்த தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கும் தி.மு.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தி.மு.க எம்.பி. வில்சன் கூறுகையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு பா.ஜ.க மற்றும் பி.ஜே.டி கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. பிப்ரவரி இறுதி வரை அரசியல் கட்சிகள் மேலும் கருத்துக்களை தெரிவிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது என்று கூறினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரிமோட் வாக்களிப்பு செய்வது பற்றி மாதிரி வாக்களிப்பு செய்யப்படும் வரை, இந்த யோசனை செயல்படுத்தப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த முறையை ஆதரித்ததால் அ.தி.மு.க எப்போதும் இதற்கு ஆதரவளிக்கும் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk letter says strong opposition to one nation one election