தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காடும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை காலை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கட்சியின் அறிவுறுத்தலின்படி, கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ரு.100 மதிப்பிலான கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட முன்வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், ”கடந்த 10 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியைத் தேடித்தந்த தி.மு.க தலைவருக்கு வாழ்த்துகள். கழ நிர்வாகிகள் மற்றும் வாக்களர்களுக்கு நன்றி.
செப்டம்பர் 17 அன்று தி.மு.க தொடங்கப்பட்ட சென்னையில் முப்பெரும் விழா கூட்டம் – தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கொடிக்கம்பங்கள் புதுப்பிப்பு .
நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கண்டனம்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“