கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணையில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதேபோல அந்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுவரை தன்னுடைய ஆட்டை கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்வாவுடன் வந்து மீண்டும் மனு ஒன்றை அளித்தார்.
இதையும் படியுங்கள்: மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம்; கோவையில் வாங்கப்பட்ட சிம் கார்டு; ஊட்டி நபரிடம் விசாரணை
/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-21-at-12.19.24.jpeg)
இது குறித்து ஜெகநாதன் தெரிவித்ததாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக ஆடுகளை விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் காவல்துறையினரும், ஆட்சியரும் தனக்கு அல்வா கொடுத்து வருவதால் அவர்களுக்கே மீண்டும் தான் அல்வாவுடன் சேர்த்து மனு கொடுப்பதாக தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil