Thangam Thennarasu | Pradhan Mantri Awas Yojana | மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பெயரில் திமுக அரசு வீடு கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவில் தமிழாக்கம் என திமுக அரச மீது சமூக வலைதளங்கில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கு சட்டப்பேரைவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அப்போது, “வீடு கட்டும் திட்டத்துக்கு 30 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள நிதியை மாநில அரசே அதிகம் வழங்குகிறது” என்றார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் தென்னரசு தனது பேச்சின்போது, “ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசே அதிக நிதி வழங்குகிறது” என்பதை அழுத்தம் திருத்தமாக கூறினார்.
இந்த நிலையில் நடப்பு இடைக்கால பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன், கோவிட் -19 காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், PMAY-G செயல்படுத்தல் தொடர்ந்தது என்றும், அரசாங்கம் மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கை எட்டுவதற்கு அருகில் உள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து, குடும்பங்களின் வளர்ந்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) கீழ் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
30% மட்டுமே நிதி.. பிரதமர் பெயரில் திட்டம்: தங்கம் தென்னரசு விமர்சனம்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு 30 சதவீதம் நிதியை மட்டும் தருகிறது; மீதமுள்ள பணத்தை மாநில அரசு வழங்குகிறது. ஆனால் திட்டத்தின் பெயர் பிரதமர் பெயரில் உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
Follow Us
Thangam Thennarasu | Pradhan Mantri Awas Yojana | மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பெயரில் திமுக அரசு வீடு கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவில் தமிழாக்கம் என திமுக அரச மீது சமூக வலைதளங்கில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கு சட்டப்பேரைவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அப்போது, “வீடு கட்டும் திட்டத்துக்கு 30 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள நிதியை மாநில அரசே அதிகம் வழங்குகிறது” என்றார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் தென்னரசு தனது பேச்சின்போது, “ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசே அதிக நிதி வழங்குகிறது” என்பதை அழுத்தம் திருத்தமாக கூறினார்.
இந்த நிலையில் நடப்பு இடைக்கால பட்ஜெட்டில், நிர்மலா சீதாராமன், கோவிட் -19 காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், PMAY-G செயல்படுத்தல் தொடர்ந்தது என்றும், அரசாங்கம் மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கை எட்டுவதற்கு அருகில் உள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து, குடும்பங்களின் வளர்ந்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) கீழ் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.