Advertisment

தீபாவளி வாழ்த்து சொன்ன தி.மு.க அமைச்சர்… அதுவும் ஐவர் புகைப்படத்துடன்…!

'அன்பினால் இல்லங்கள் ஒளிரட்டும், உள்ளங்கள் மகிழட்டும்…' என்று தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Oct 24, 2022 10:24 IST
New Update
DMK minister senthil balaji

Happy Diwali 2022 - DMK minister senthil balaji Tamil News: அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாள் மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் தொடங்கி இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள் என அனைவரும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தீபாவளி வாழ்த்து சொன்ன தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்நிலையில், தி.மு.க அமைச்சரான மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பினால் இல்லங்கள் ஒளிரட்டும், உள்ளங்கள் மகிழட்டும்.. அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.. களிப்புடனும் கவனத்துடனும் கொண்டாடுவோம்.' என்று பதிவிட்டுள்ளார்.

தீபாவளி வாழ்த்தை தவிர்க்கும் தி.மு.க

பொதுவாக, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. இந்த வழக்கம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. தற்போது இதே வழிமுறையையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடைபிடித்து பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இதேபோல், அவரது மகன் உதயநிதி, திமுக மூத்த நிர்வாகிகள், திமுக அமைச்சர்களும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். அண்மையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தார்.

பாஜக அமைச்சர் கண்டனம்

திமுகவின் இந்த மரபை சுட்டிக்காட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.

ஐவர் புகைப்படத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து

publive-image

தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பிலோ, திமுக சார்பிலோ எந்தவொரு வாழ்த்து செய்தியும் வரவில்லை. ஆனால், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியோ தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி பண்டிகை வாழ்த்து தெரித்துள்ளார். அத்துடன் அவர் பகிர்ந்துள்ள பதில் படத்தில் ஒரு ஓரத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் படங்களும் இடம்பெற்று உள்ளன.

மேலும், அந்த புகைப்படத்தில், 'இல்லங்கள் ஓளிரட்டும், உள்ளங்கள் மகிழட்டும்.' என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முதல்வர் உட்பட வேறு யாரும் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்த்து பதிவு, திமுகவினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

#Tamilnadu #Dmk #Diwali #V Senthil Balaji #Dmk Stalin #Deepavali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment