திமுக பொதுச்செயலாளர் பதவி இப்போது இல்லை: துரைமுருகன் தொடர்ந்து பொருளாளர் என ஸ்டாலின் அறிவிப்பு
M K Stalin : துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கிறேன்
M K Stalin : துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கிறேன்
dmk, mk stalin, coronavirus, lockdown, anbazhagan death, treasurer, duraimurugan, resignation, announcement, extension, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
தி.மு.கவின் பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார் என கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Advertisment
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவால், அப்பதவி காலியாக இருந்துவருகிறது. அதனையடுத்து, பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அவரின் விலகலை ஏற்றுக்கொள்வதாகவும் கடந்த மார்ச் மாதம் தி.மு.க தலைவர் .ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மார்ச் 29-ம் தேதி தி.மு.க பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்வு நடைபெறுவதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் மறுதேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
Advertisment
Advertisements
இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ‘கொடிய நோயான கொரோனா அச்சுறுத்தும் நேரத்தில், கழக சட்ட விதி 17-யை பயன்படுத்தி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பொதுக்குழு கூடும் வரையில், கழக சட்ட விதி-18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil