V.P. Duraisamy sacked : திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி.துரைசாமி நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் வி.பி.துரைசாமி. இவர் மாநிலங்களை உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. அருகில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் முடிவெடுப்பதாக இவர் தெரிவித்திருந்தார்.
இவர், சமீபத்தில் பாஜக மாநில தலைவர் முருகனைச் சந்தித்திருந்த நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சந்திப்பு ஏன்? – துரைசாமி விளக்கம் : பாஜகவில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மாநில தலைவராக வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முருகன் எனக்கு ஒரு வகையில் உறவினர் அந்த அடிப்படையில் அவரை சந்தித்து வாழ்த்துக்கூறினேன். உறவுக்கு கை கொடுப்போம் என்ற அடிப்படையில் முருகனை சந்திக்க சென்றேன், ஆனால் கொரோனா காரணமாக கை கொடுக்கமுடியவில்லை.
இந்த சந்திப்பு குறித்து திமுக தலைமை என்னிடம் விளக்கம் கோரினால் கட்டாயம் விளக்கம் கொடுப்பேன். அது எனது கடமை. நான் அளிக்கும் விளக்கத்தை ஏற்பதும், ஏற்காததும் தலைமையின் முடிவு. அதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும், கட்சி எடுக்கும் முடிவை கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்வேன். நான் ஒரு சாதாரண தொண்டன் என்று துரைசாமி தெரிவித்திருந்தார்.
பதவி பறிப்பு : இந்நிலையில் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், வி.பி.துரைசாமிக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்பார்த்த ஒன்று தான் : இந்நிலையில், டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த வி.பி.துரைசாமி, தனது பதவி பறிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்று தான் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Dmk mkstalin dmk deputy general secretary v p duraisamy sacked andhiyur selvaraj