Advertisment

தேர்தல் வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk mla anitha radhakrishan, anitha radhakrishnan plea dismissed by chennai high court, தேர்தல் வழக்கு, திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றம், election case aganinst anitha radhakrishnan, election case, tiruchenthur dmk mla anitha radhakrishnan, chennai high court

dmk mla anitha radhakrishan, anitha radhakrishnan plea dismissed by chennai high court, தேர்தல் வழக்கு, திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றம், election case aganinst anitha radhakrishnan, election case, tiruchenthur dmk mla anitha radhakrishnan, chennai high court

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்

Advertisment

அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வாக்காளர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்து உள்ளதாகவும் அதில் வேட்புமனுவில்16 குறைபாடுகள் உள்ளதாகவும், குறைபாடுகள் உள்ள வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்ட விரோதமானது எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

ராம்குமார் ஆதித்தன் இந்த தேர்தல் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், காலதாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கிருஷ்ணகுமார், இன்று உத்தரவிட்டார். அதில், அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று உத்தரவிட்டு தேர்தல் வழக்கை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai High Court Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment