காஞ்சிபுரம் தொகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை தி.மு.க எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். அவர் பேருந்தை ஓட்ட முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சிறிய பள்ளத்தில் இறங்கி சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் தொகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை தி.மு.க எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். அரசு பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த எம்.எல்.ஏ., வாகனத்தை ஓட்ட முயற்சி செய்தார். ஆனால், தி.மு.க எம்.எல்.ஏ-வின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் கட்டப்பட்டிருந்த தி.மு.க கொடிகளை சாய்த்து, சிறிய பள்ளத்தில் இறங்கி சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து மின்கம்பத்திற்கு நெருக்கமாக சிக்கிக்கொண்டதால், தி.மு.க-வினரும் மற்றும் பேருந்தில் இருந்தவர்களும் அவசரமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்.எல்.ஏ., கட்சியினர் மற்றும் பலர் பேருந்தை அந்த இடத்திலிருந்து நகர்த்துவதற்கு கைகளால் தள்ளினர்.
இந்த சம்பவத்தில், பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. பேருந்து அங்கிருந்து நகர்த்திய பின், அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“