Advertisment

சென்னை வெள்ள பாதிப்பு: கேள்வி எழுப்பிய மக்கள் மீது தாக்குதல்... குற்றச்சாட்டை மறுத்த தி.மு.க எம்.எல்.ஏ

சென்னையில் வெள்ள பாதிப்பின்போது, நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கேள்வி எழுப்பியதால், தி.மு.க எம்.எல்.ஏ ஜே. ஜான் எபினேசர் தனது தொகுதியான ஆர்.கே. நகர் மக்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
ebinesar

தி.மு.க எம்.எல்.ஏ ஜான் எபினேசர்

சென்னையில் வெள்ள பாதிப்பின்போது, நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கேள்வி எழுப்பியதால், தி.மு.க எம்.எல்.ஏ ஜே. ஜான் எபினேசர் தனது தொகுதியான ஆர்.கே. நகர் மக்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: DMK MLA John Ebenezer accused of attacking people who questioned his ‘inaction’ during Chennai floods

ஒருவர் தாக்கப்படும் காட்சி இடம்பெற்ற 18 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. தி.மு.க எம்.எல்.ஏ ஜான் எபினேசரை அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எம்.எல்.ஏ.வை எதிர்த்து கேள்வி எழுப்பியதற்காக, தி.மு.க உறுப்பினர்கள் அவரைத் தாக்கியதில் ரத்தக் காயம் ஏற்பட்ட ஒரு நபர் வீடியொவில் இடம்பெற்றுள்ளார்.

“தங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் அல்லது எம்.எல்.ஏ போன்ற யாரும் தங்களைச் சந்திக்கவில்லை என்றும், அவர்கள் உணவு அல்லது தண்ணீரின்றி சிரமப்படுவதால் இங்குள்ள பொதுமக்கள் கோபமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை எம்.எல்.ஏ வந்தபோது அவரிடம் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சண்டையில் எம்.எல்.ஏ-வும் ஈடுபட்டார். ஒரு நபர் காயமடைந்தார், அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று அப்பகுதியில் குடியிருப்பவர் ஒருவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தி.மு.க எம்.எல்.ஏ எபினேசர் கூறுகையில், காயமடைந்த நபரின் சகோதரி அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருப்பதாகவும், அவரது வழிகாட்டுதலின் பேரில், அ.தி.மு.க ஆதரவாளர்கள் குழு ஒன்று கூடி நிகழ்ச்சியை சீர்குலைத்து, நிவாரணப் பணிக்காக அவர் அந்த இடத்தை அடைந்தபோது தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறினார்.

அந்த வீடியோவில், அப்பகுதியை பதட்டமான சூழ்நிலையில் காட்டியது, மேலும் சிலர் ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர், எம்.எல்.ஏ-வை மன்னிப்பு கேட்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தி.மு.க எம்.எல்.ஏ எபினேசர் மறுத்துள்ளார். Indianexpress.com இடம் பேசிய எபினேசர், இவை அனைத்தும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க நடத்திய நாடகம் என்றார்.

“ஞாயிற்றுக்கிழமை இரண்டு பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வழங்க திட்டமிட்டிருந்தோம். நேதாஜி நகரில் நிவாரணப் பொருட்களை விநியோகித்து முடித்தோம், சுன்னாம்பு கால்வாய் செல்லும் வழியில் இருந்தோம். மதியம் 1 மணியளவில், குடிபோதையில் ஒரு நபர் நிகழ்ச்சியைத் தொந்தரவு செய்தார். ஏற்பாட்டாளர்கள் அவரது வீட்டிற்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதாகவும், ஏற்பாடுகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். ஆனாலும், அவர் தொடர்ந்த் இடையூறு செய்தார்.

attacking

“சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார், பின்னர் எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு வயதான உறுப்பினரைத் தாக்கினார். எங்கள் உறுப்பினர்கள் அவரை அந்த இடத்திலிருந்து தள்ளிவிட்டனர். பின்னர், அவர் அவரைத் தாக்கிய ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனால் காயம் ஏற்பட்டது. இருப்பினும், நாங்கள் அவரை அடித்தோம் என்பது போல் திட்டமிட்டு காட்டப்பட்டது” என்று எபினேசர் கூறினார்.

மேலும், காயமடைந்த நபரின் சகோதரி அ.தி.மு.க-வில் உறுப்பினர் என்றும், அவரது வழிகாட்டுதலின் பேரில், நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காக அ.தி.மு.க ஆதரவாளர்கள் குழு ஒன்று கூடி, நிவாரணப் பணிக்காக அவர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் என்று தி.மு.க எம்.எல்.ஏ எபினேசர் கூறினார். 

எம்.எல்.ஏ எபினேசர், தானோ அல்லது அவரது கட்சிக்காரர்களோ பொதுமக்களை தாக்கவில்லை என்று கூறினார்.

“இது திட்டமிட்ட போராட்டம். இந்த வெள்ள நிவாரணப் பணிகளை தி.மு.க நடத்தும் இடங்களிலெல்லாம் அ.தி.மு.க, பா.ஜ.க தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். நாங்கள் ஐந்து நாட்களும் களத்தில் இருந்தோம், மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம்.” என்று எம்.எல்.ஏ எபினேசர் கூறினார். 

“இது வேண்டுமென்றே செய்யப்பட்டது, இதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்குவதற்காக இங்கே வந்தபோது ஏற்பட்ட நெரிசலின்போது எடுக்கப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டு,  பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக  சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இதனால், 14 வயது சிறுமி உயிரிழந்தார், ஆனால் எதிர்க்கட்சிகள் பிரச்னையை திசை திருப்ப விரும்புகின்றன. எனவே அவர்கள் இந்த வீடியோவைப் பரப்புகிறார்கள்” என்று தி.மு.க எம்.எல்.ஏ எபினேசர் கூறினார்.

திருவொற்றியூரில் அ.தி.மு.க-வினர் சனிக்கிழமை வழங்கிய நிவாரணப் பொருட்களை வாங்க வரிசையில் காத்திருந்த 14 வயது சிறுமி வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். பின்னர், மருத்துவமனையில் இறந்த அந்த சிறுமி வி. யுவஸ்ரீ என தெரியவந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

chennai flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment