உயிருக்கு உயிரான அன்பழகன் மரணம்: மீள முடியாமல் தவிக்கும் மா.சு குடும்பம்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ-வுமான மா.சுப்ரமணியனின் இளைய மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பு காரணமாக உயிரிழந்ததால் அவருடைய குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

DMK MLA Ma Subramanian's son passes away, DMK MLA Ma Subramanian's son death, DMK MLA Ma Subramanian's son anbazhagan dies after recovery from covid-19, திமுக, திமுக எம்எல்ஏ மா சுப்ரமணியன் மகன் அன்பழகன் மரணம், coronavirus, covid-19, மா சுப்ரமணியன் மகன் மரணம், chennai, fomer chennai mayor Ma Subramanian

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ-வுமான மா.சுப்ரமணியனின் இளைய மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பு காரணமாக உயிரிழந்ததால் அவருடைய குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்பு காரணமாக உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன். இவர் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் உள்ளார். திமுகவில் சென்னையில் முக்கிய தலைவராக உள்ளார். மராத்தான் ஓட்ட பந்தய வீரரான மா.சுப்ரமணியம் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்.

மா.சுப்ரமணியத்துக்கு காஞ்சனா என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உண்டு. மூத்த மகன் செழியன் லண்டனில் மருத்துவராக உள்ளார். இரண்டாவது மகன் அன்பழகன் மாற்றுத்திறனாளி. அன்பழகன் சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். சிறப்புக் குழந்தையான அன்பழகனுக்கு 34 வயது. போலியோ பாதிக்கப்பட்டதாலும் சிறப்புகுழந்தை என்பதாலும் அன்பழகன் சக்கர நாற்காலியில் இருந்து வந்தார்.

மா.சுப்ரமணியமும் அவரது மனைவி காஞ்சனாவும் சிறப்புக் குழந்தையான அன்பழகன் மீது அளவு கடந்த அன்பு வைத்து உயிராகக் கருதி வளர்த்து வந்தனர். மா.சுப்ரமணியன் அரசியல், தொழில், என்று வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்தாலும், அவருடைய மனைவி காஞ்சனா, வீட்டை விட்டு செல்லாமல் உயிரான மகன் அன்பழகனை உடனிருந்து பராமரித்து வந்தார் என்று மா.சுப்ரமணியம் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அண்மையில், மா.சுப்ரமணியத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அவருடைய மகன் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அன்பழகன் உடனடியாக, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, 3 நாட்களுக்கு முன்பு அன்பழகனுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா வைரஸ் நெகடிவ் என்று முடிவு வந்தது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில், அன்பழகனுக்கு திடீரென நேற்று (அக்டோபர் 17) மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். உயிராக வளர்த்த இளையமகன் கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் மரணமடைந்ததால் மா.சுப்ரமணியமும் அவரது மனைவி காஞ்சனாவும் மீளாத் துயரத்தில் மூழ்கியுள்ளனர். அன்பான மகன் அன்பழகன் உயிரிழந்ததால் காஞ்சனாவை தேற்ற முடியாமல் மா.சுப்ரமணியமும் அவரது உறவினர்களும் தவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk mla ma subramanians son passes away after recovery from covid 19

Next Story
பொன்முடி மகன் சொத்து பிரச்னை பற்றி யாரும் வாய் திறக்காதது ஏன்? தமிழருவி கேள்விtamilaruvi manian, gandhian people's movement, தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம், திமுக, திமுக எம்பி கௌதம் சிகாமணி சொத்துக்கள் முடக்கம், ரஜினிகாந்த், tamilaruvi manian questions raised, dmk mp gautham sigamani property seized by ed, rajinikanth, dmk, ponmudi son gautham sigamani, பொன்முடி மகன் கௌதம் சிகாமணி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express