திமுக எம்.எல்.ஏ பூங்கோதை மருத்துவமனையில் அனுமதி; ஐசியுவில் சிகிச்சை

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா இன்று தீடீரென சுயநினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

dmk mla poongothai aladi aruna admitted in hospital, poongothai aladi aruna, திமுக எம்எல்ஏ பூங்கோதை, பூங்கோதை ஆலடி அருணா, பூங்கோதை எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி, திமுக எம்எல்ஏ பூங்கோதை மருத்துவமனியில் அனுமதி, dmk mla poongothai, alangudi mla poongothai, poongothai mla admitted in hospital, nellai, hospital report

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா இன்று தீடீரென சுயநினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நெல்லை ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா இன்று தீடீரென சுயநினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்ந்துகொண்ட எம்.எல்.ஏ பூங்கோதையை கட்சியினர் சிலர் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ பூங்கோதை இன்று தீடீரென சுய நினைவிழந்த நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ பூங்கோதையின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ சுயநினைவு இல்லாத நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் விழித்துக்கொண்டிருக்கிறார். பதிலளிக்கிறார். அவருடைய உடல்நிலை திருப்திகரமாக உள்ளது.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருடைய உடல்நிலை உறுதியாக உள்ளது. அவருடைய உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றானர்.” என்று அறிவித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk mla poongothai aladi aruna admitted in hospital

Next Story
மத்திய அமைச்சர் இந்தியில் பதில்; சட்டவிதி மீறல் – சு.வெங்கடேசன் கடிதம்cpm mp su venkatesan, madurai mp venkatesan, su venkatesan letter to central minister, சு வெங்கடேசன் எம்பி, மதுரை, மார்க்சிஸ்ட் கட்சி, தமிழக எம்பிக்களுக்கு இந்தியில் பதில் அளிப்பது சட்டவிதி மீறல், replying to tamil nadu mps in hindi against law, minister of state for home affairs, nithyananda rai, மத்திய அமைச்சர் நித்யானந்த ராய்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com