15 வயது சிறுமி கற்பழித்து கொலை : 15 வயது சிறுமியை கற்பழித்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் கடந்த 2006 முதல் 2011 தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் (வயது 52) செயல்பாட்டு வந்தார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வறுமை காரணமாக தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
15 வயது சிறுமி கற்பழித்து கொலை - வழக்கு பதிவு செய்த தாயார்
ஒரு சில நாட்களில் தனது தாயாரை போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து மகளை அழைத்து செல்வதற்காக சிறுமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்த போது, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் சிறுமியின் தாயாரை போனில் தொடர்பு கொண்டு சிறுமி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பெரம்பலூர் வந்த சிறுமியின் தாயார், ஆஸ்பத்திரியில் மகளை பார்த்தபோது சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்து போனார். சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது பன்னீர்செல்வம் இறந்து போனார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ராஜ்குமார்க்கு எதிராக காவல்துறை குறிப்பிட்ட கற்பழிப்பு, மரணத்திற்கு காரணம், கூட்டுச் சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் படிக்க : போக்ஸோ ஆக்ட் என்றால் என்ன ?
இந்த தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும். கூட்டாளி ஜெய்சங்கர் எதிராக கூட்டுச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், இருவருக்கும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல் துறை தரப்பில் நிரூபிக்கவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.