செய்யூர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா: தமிழகத்தில் பாதிப்புக்கு உள்ளான 5-வது எம்.எல்.ஏ.

RT Arasu MLA: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 5-வது எம்.எல்.ஏ செய்யூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

By: Updated: June 27, 2020, 01:22:13 PM

RT Arasu MLA Tested Coronavirus Positive: திமுக.வை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். அவர், செய்யூர் திமுக எம்.எல்.ஏ.வான ஆர்.டி.அரசு. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 5 ஆனது.

ஆர்.டி.அரசு காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர், மருத்துவரும்கூட! திமுக மருத்துவ அணியில் மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.

திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபெற்று உதவி வழங்கும் பணிகளை தனது தொகுதியில் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையொட்டி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கொரோனா தொற்று காரணமாக பலியானார். ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, கள்ளக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 5-வது எம்.எல்.ஏ செய்யூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக.வில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 3-வது எம்.எல்.ஏ இவர். மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட ட்வீட்டில், ‘#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் MLA @dr_rtarasu_ அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.

மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும்!’ என குறிப்பிட்டிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Dmk mla rt arasu tested coronavirus positive cheyyur mla r t arasu latest news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X