Advertisment

திமுக எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திண்டிவனம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக அதிமுக வேட்பாளர் தெரிவித்த குற்றச்சாட்டு நிரூபிக்க படவில்லை எனவே வழக்கு தள்ளுபடி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK MLA Seethapathy, tindivanam MLA Seethapathy, DMK MLA Seethapathy tindivanam assembly, திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி, தேர்தல் வழக்கு, Election case against DMK MLA Seethapathy, election case against wining of DMK MLA Seethapathy, திமுக எம்எல்ஏ சீதாபதி வெற்றி செல்லும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, chennai high court judgement, HC dismisses plea, upholds DMK MLA's election from Tindivanam, திமுக

DMK MLA Seethapathy, tindivanam MLA Seethapathy, DMK MLA Seethapathy tindivanam assembly, திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி, தேர்தல் வழக்கு, Election case against DMK MLA Seethapathy, election case against wining of DMK MLA Seethapathy, திமுக எம்எல்ஏ சீதாபதி வெற்றி செல்லும், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, chennai high court judgement, HC dismisses plea, upholds DMK MLA's election from Tindivanam, திமுக

திண்டிவனம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு 61,879 வாக்குகள் பெற்ற சீதாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இதில் திமுக வேட்பாளர் சீதாபதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், தாபல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு மற்றும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது எனவே பல்வேறு முறைகேடுகள் மூலம் 101 வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை சொல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். தபால் ஓட்டுகள் முறையாக என்ன படவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார் எனவே சீதாபதி வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் .

இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன், முன் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மனுதரார் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்று கூறி என்று அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிபதி, எம் எல் ஏ சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் எனவும் தபால் வாக்குகளை திமுக எம்.எல்.ஏ சீதாப்பதியின் மகன் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தார் என்ற அதிமுக வேட்பாளரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும் அதே போன்று மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக அதிமுக வேட்பாளர் தெரிவித்த குற்றச்சாட்டும் நிரூபிக்க படவில்லை எனவே ராஜேந்திரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Chennai High Court Dmk Tindivanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment