பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏவின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது பெண் வேலை செய்து வந்தார். அந்த பெண்ணை மதிவாணனும், மெர்லினும் சேர்ந்து கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாய் பேட்டியளித்தனர். மேலும் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்த தொடர்ந்து நீலாங்கரை மகளிர் காவல்துறையினர் எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எம்.எல்.ஏவின் மகனுக்கும் மருமகளுக்கும் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக எம்.எல்.ஏ-வின் மகன் மருமகள் சரணடையும் நாளிலேயே சட்டத்திற்குட்பட்டு ஜாமீன் மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த சிறுமியை நேரில் வர போலீசார் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று அச்சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவை காவல்துறையினர் கைது செய்தனர். இருவருக்கும் பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி டி.வி. ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“