Advertisment

நீட் தேர்வு: ஆளுநர் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தவறாக வழிகாட்டுகிறார் - முரசொலி காட்டம்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவக்ரளுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்த நிலையில், திமுகவின் முரசொலி நாளிதழ், “தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தவறான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்” என்று காட்டமாக சாடியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
Tamil news, Murasoli, DMK, Murasoli criticise Governor RN Ravi, Tamil Nadu Governor RN Ravi, NEET Exam

நீட் தேர்ர்வு உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவக்ரளுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்த நிலையில், திமுகவின் முரசொலி நாளிதழ், “தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் தவறான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்” என்று காட்டமாக சாடியிருக்கிறது.

Advertisment

திமுக அரசின் நீட் தேர்வு சட்டத்துக்கு ஆளுந ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஎம், பாமக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களின் தற்கொலை நிகழ்வுகளும் செய்திகளில் இடம்பிடித்தது.

இந்த நிலையில், நீர் தேவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு திமுகவின் முரசொலி நாளிதழ், “நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. தமிழக ஆளுநர் அதன் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்” என்று தலையங்கத்தில் கடுமையாக சாடியுள்ளது.

இது குறித்து செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியான முரசொலி நாளிதழ் தலையங்கத்தில் ‘நீட் தேர்வு! ஆளுநரின் தவறான வழிகாட்டுதல்!’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதாவது: “நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. தமிழக ஆளுநர் அதன் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார். “தமிழ்நாட்டில் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் தங்களது திறமையால் பெரிய மாநிலங்களைக் கூடப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி அடையாத மாணவர்கள் மிரட்சியோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. இது வெறும் தற்காலிக பின்னடைவு மட்டுமே. கடின உழைப்பைச் செலுத்தி உறுதியான மனத்துடன் நம்மை தயார் செய்தால் வெற்றி பெறுவது உறுதி” என்று சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள்.

தமிழ்நாட்டின் தேர்ச்சி விபரம் கொண்ட புள்ளிவிவபரத்தை பார்த்திருந்தால் இப்படியொரு அறிக்கையை அவர் வெளியிட்டு இருக்க மாட்டார். ‘நீட்’ தேர்வை ஆளுக்கு முன்னால் விழுந்து தூக்கிக் காப்பற்ற வேண்டிய துடிப்பு அவருக்கு எதனால் ஏற்படுகிறது? யாரால் ஏற்படுத்தப்படுகிறது? தமிழ்நாட்டில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 67 ஆயிரத்து 787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதாவது 51.30 சதவிகித மாணவர்கள் தான் தேர்ச்சியே பெற்றுள்ளார்கள். அதிக மதிப்பெணா எவ்வளவு என்பது எல்லாம் அடுத்தடுத்த விவகாரங்கள்.

இந்தியா முழுவதும் தேர்வு எழுதியவர்கள் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர். இதில் 9 லட்சத்து 69 பேர்தான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதாவது பாதி அளவில் தான் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 56.44
2021 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 56.34
2022 ஆம் அனடு தேர்ச்சி விகிதம் 56.27 இப்படி குறைந்துகொண்டே போகிறது. தேர்ச்சி விகிதம். தேர்வு எழுதியதில் பாதிக்கும் மேற்பட்டவர்களைத் தோல்வி அடைய வைத்திருப்பதுதான் ஒரு தகுதித் தேர்வா? இதற்கு ‘தோல்வித் தேர்வு’ என்ன்று பெயர் சூட்டுவதே சரியானதாக இருக்கும்.

மதுரையைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவர் தேசிய அளவில் 30ஆவது இடைத்தைப் பிடித்துவிட்டதால், பெரிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டோம் என்று மார்த்தட்டிக்கொள்ள முடியுமா? பாதிக்கு பாதி மாணவர்களை தோல்வியடையச் செய்தததன் மூலமாக பாதி மாணவர்களைத் தகுதி நீக்கம் செய்ததை யார் பேசுவது?

இது குறித்த செய்தியை வெளியிட்ட ‘தினமணி நாளிதழ், ‘நீட் தேர்வில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்’ என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. டெல்லி சத்தீஸ்கர் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில்தான் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்லனர்.

இது என்ன சூட்சுமம்? அப்படியானால் இது வடமாநிலத் தேர்தல் அல்லவா இது? ஏன் இதில் தமிழ்நாடு விதிவிலக்கு கேட்கிறது என்பதை இது உணர்த்தவில்லையா?

நீட் தேர்வு முடிவுகள் வந்த நாளில் நாளிதழ்களில் கோச்சிங் செண்டர்கள் சார்பில் தரப்பட்டுள்ள விளம்பரங்களைப் பாருங்கள். அதில் உள்ள முகங்களைப் பாருங்கள். அது யாருக்கான தேர்வு என்பதை அறியலாம். பல லட்சங்கள் கொடுத்து இத்தகைய பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்களால் மட்டுமே இத்தேர்வில் வெல்ல முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது. இத்தகைய பயிற்சி நிறுவனம் நடத்துபவர்கள் கடந்த ஐந்தாண்டு காலத்தில் தங்கள் வருமானத்தை எத்தனை மடங்கு அதிகமாகக் காட்டி இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம்கூட வந்ததே. சில தனியார் நிறுவனங்களில் மூளையில் தோன்றி சில அதிகாரிகளால் திட்டமிட்டு உள்ள சொருகப்பட்ட மிக மோசடித்தனமான தேர்வு முறைதான் நீட் தேர்வு. அதனால் தான் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்க்கிறது.

தோல்வி அடைந்தவர்களை ‘தற்காலிக பின்னடைவு தான்’ என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார் ஆளுநர் அவர்கள். இரண்டாவது முறையாகவும் தேர்வு எழுதி மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் மாணவி லக்சனா சுவேதா. இப்படி எத்தனை பே?

அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் மிகமிகக் குறைவாகும். அவர்களால் பல லட்சம் கொடுத்து பயிற்சி பெற முடியவில்லை என்பது ஒன்று தானே காரணமாக இருக்க முடியும்.

*சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவிற்கு இடையூறாகவும் சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இஉர்ந்து எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது.

*அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், படியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

*எம்.பி.பி.எஸ் மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதி செய்வதாக தெரியவில்லை.

*ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள் எம்.பி.பி.எஸ்க்கு சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு புகுத்தியுள்ளது.

*நீட் தேர்வானது மருத்துவக்கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. என்று சட்டமுன்வடிவில் தெளிவாக உள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பதற்கு இவைதான் காரணம் ஆகும்.

இது தகுதித் டேர்வு அல்ல. இதற்கு முன் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் பணம் கொடுத்து படிக்க வந்தார்கள். அதனை நீட் தேர்வு தடுத்துவிட்டது என்பதே மபெரும் பொய்யாகும். நீட் தேர்வின் மொத்த மதிப்பெண் 720 ஆகும். அரசு நிர்ணயித்துள்ள தகுதி மதிப்பெண் 117 ஆகும். 117 மதிப்பெண் எடுத்து பணம் கொடுத்து உள்ளே உழைய வழிமுறை இருக்கும்போது இது எப்படி தகுதித் தேர்வு ஆகும்” என்று முரசொலி நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Neet Governor Rn Ravi Murasoli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment