Advertisment

இந்தியாவின் நிதிநிலையை கண்டுபிடிக்க நிர்மலா சீதாராமனுக்கு நிதானம் தேவை – முரசொலி

நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறியது பொய்; ஜிஎஸ்டி கவுன்சிலை 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக மத்திய அரசு பயன்படுத்துகிறது – பி.டி.ஆர்; நிர்மலா சீதாராமனுக்கு நிதானம் தேவை – முரசொலி

author-image
WebDesk
New Update
இந்தியாவின் நிதிநிலையை கண்டுபிடிக்க நிர்மலா சீதாராமனுக்கு நிதானம் தேவை – முரசொலி

Arun Janardhanan 

Advertisment

DMK mouthpiece says Nirmala needs patience to figure out India’s finances: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியை பின்னர் தேடிக் கொள்ளலாம், ஆனால் அவர் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது என்று பரிந்துரைத்து, தமிழகத்தில் ஆளும் தி.மு.க.,வின் பத்திரிக்கையான 'முரசொலி' சனிக்கிழமை அவரை நிதானமாக நாட்டின் நிதி பற்றிய உண்மையை "கண்டுபிடிக்க" கேட்டுக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் குறித்து நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கருணாநிதி நினைவு நாள்: சென்னையில் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

தமிழ்நாடு மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு பதிலளித்த முரசொலி தலையங்கம், ஆகஸ்ட் 2021 இல் எரிபொருளுக்கான வரியை தமிழக அரசு குறைத்தது என்பது நிர்மலா சீதாராமனுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பியது. மேலும், “எரிபொருள் விலையை உயர்த்துபவர்கள் தான், அதைக் குறைக்க வேண்டும்," என்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அறிக்கையை மேற்கோள் காட்டிய முரசொலி தலையங்கம், "உங்களை நோக்கி கேள்விகள் இருந்தால், உங்கள் பதில் மற்றவர்கள் மீது பழியைப் போடுவதாக இல்லாமல், அவற்றுக்கு பதிலாக இருக்கட்டும். பாராளுமன்றம் விவாதத்திற்குரிய இடம். கேள்விகள் நிச்சயம் இருக்கும். அவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அங்கு இருப்பவர்கள் ஒரே மாதிரி பேசுவதற்கு கோரஸ் குழுவில் உறுப்பினர்களாக இல்லை,” என்று குறிப்பிட்டது.

ஜி.எஸ்.டி வரி உயர்வில் மாநிலங்களுக்கு சம பொறுப்பு என்ற நிர்மலா சீதாராமனின் வாதத்தை எடுத்துக் கொண்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலின் “நூற்றுக்கு நூறு சதவீதமும்”, “மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல்” மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது என்றார்.

ஜி.எஸ்.டி கூட்டாட்சியின் மாதிரியாகப் பார்க்கப்பட்டாலும், ஜி.எஸ்.டி கவுன்சிலை ஒரு "ரப்பர் ஸ்டாம்ப்" ஆக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று பி.டி.ஆர் கூறினார்.

"முக்கிய முடிவுகள் அனைத்தும் மத்திய அரசால் எடுக்கப்படுகின்றன" என்று கூறிய பி.டி.ஆர், "(ஜி.எஸ்.டி) கவுன்சிலில், தீர்மானம் நிறைவேற்ற 75% வாக்குகள் தேவை என்று அமைப்பு கூறுகிறது. ஆனால் மத்திய அரசுக்கு 33% வாக்குகள் உள்ளன. அதாவது யாரேனும் (மாநிலங்கள்) கொண்டு வரும் எந்தத் தீர்மானமும் மத்திய அரசால் எதிர்க்கப்படுகிறது அல்லது மாநிலத்தின் அத்தகைய தீர்மானங்கள் வந்தவுடன் இறந்துவிடும்,” என்று கூறினார்.

மத்திய அரசு வரியை குறைத்தபோது தமிழகம் வரியைக் குறைக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்கு, நாடாளுமன்றத்தில் அவர் கூறியது முற்றிலும் பொய்யானது என்றும் தவறானது என்றும் கூறிய பி.டி.ஆர், "5 மாநிலங்களில் தேர்தலை எதிர்நோக்கி எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கனவு கண்டதற்கு முன்பாக"ஆகஸ்ட் 2021ல், தமிழகம் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததை சுட்டிக்காட்டினார்.

”எரிபொருள் விலையைக் குறைத்த முதல் அரசு தமிழக அரசு, அது மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு. யாரேனும் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று நாங்கள் குறைக்கவில்லை என்று கூறுவது முழுமையான பொய்” என்று பி.டி.ஆர் கூறினார்.

பிராண்டட் உணவுப் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க தமிழகம் ஒப்புக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் கூறியதையும் ‘முரசொலி’ தலையங்கம் விமர்சித்துள்ளது.

“இந்த கட்டண உயர்வு மூன்று கட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். முதலாவதாக, தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய வரிவிதிப்புக் குழு, வரி விகிதங்களில் தொடர் மாற்றங்களைப் பரிந்துரைத்தது. அப்போது, ​​விலை உயர்வை நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக அதிகாரிகள் மூலம் எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் சமர்பிக்கப்பட்டது” என்று அமைச்சர் பி.டி.ஆர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, "அந்தப் பரிந்துரைகள் அனைத்தும்" மத்திய அரசின் ஜி.எஸ்.டி துணைக் குழுவால் விகிதப் பகுத்தாய்வுக்காக எடுக்கப்பட்டது. பல விவாதங்கள் நடத்தப்பட்டன. நாங்கள் அதன் பாகமாக இல்லாவிட்டாலும், நாங்கள் இன்னும் சமர்ப்பிப்புகளை வழங்கினோம், மீண்டும் அதை எதிர்த்தோம். அவர்களின் விவாதங்களின் முடிவில், அவர்கள் (மத்திய அரசு) விகிதத்தை பகுத்தறிவதற்கான 56 பரிந்துரைகளுடன் ஒரு சுருக்க அறிக்கையை வெளியிட்டனர், சில அதிகரிப்புகளுடன் (மற்றும்) சில குறைப்புகளுடன்," என்று பி.டி.ஆர் கூறினார்.

“அடுத்த முழு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இது 20 நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று முழு 56 பொருட்களின் விலை பரிந்துரை அறிக்கை. ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு 56 பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, முழுவதுமாக ஒப்புக்கொள்ளலாம் அல்லது முழுமையாக உடன்படவில்லை என்று கூறலாம் என தெரிவிக்கப்பட்டது. நேரம் இல்லாததால், அது ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த உண்மையை அவர் பாராளுமன்றத்தில் சொல்லவில்லை. இது மூன்று-படி செயல்முறை. மேலும் ஒரு பொருளின் ஒரே முடிவுக்கு வாக்களித்தது போல் கூறியுள்ளார்," என்று பி.டி.ஆர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nirmala Sitharaman Ptrp Thiyagarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment