Advertisment

வி.சி.க, ம.தி.மு.க, முஸ்லிம் லீக்... தலா ஒரே ஒரு சீட்தானா? தொகுதி பங்கீட்டில் தி.மு.க கறார்

நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க அதன் கூட்டணி கட்சிகளான வி.சி.க, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லிக் ஆகிய கட்சிகளுக்கு 2024 லோக் சபா தேர்தலில், தலா 1 இடங்களை வழங்க முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

author-image
WebDesk
New Update
anna arivalayam

வி.சி.க, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லிக் ஆகிய கட்சிகளுக்கு 2024 லோக் சபா தேர்தலில், தலா 1 இடங்களை வழங்க தி.மு.க முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும்  8 மாதங்கள் உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் இணைந்துள்ளன. இந்திய கூட்டணியில், காங்கிரஸ், தி.மு.க திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 

Advertisment

அண்மையில், மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே இடங்கள் பங்கீடு குறித்து ஒரு குழு அமைத்து விரைவக தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்தியா கூட்டணியில், உள்ள தி.மு.க தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ளது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து, தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அப்படியே தொடர்கிறது. முந்தைய 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதே, தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுக்கு இடம் பங்கீடு செய்வதில் கறாராக நடந்துகொண்டது. ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அக்கட்சியின் வேட்பாளரை தி.மு.க-வின் சின்னத்தில் போட்டியிடச் செய்தது.

அதே போல, வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமாரை விழுப்புரம் தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடச் செய்தது. தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு தி.மு.க தலைமையில் அமைந்த கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றது. 

அப்போது, தி.மு.க கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதால், இந்த தேர்தலில் கூடுதலாக இடங்களைக் கேட்க வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில், தி.மு.க தனது கூட்டணியில் உள்ள வி.சி.க, ம.தி.மு.க, முஸ்லிம் லீக் ஆகிய சிறிய கட்சிகளுக்கு தலா ஒரே ஒரு இடம் அளிக்கப்படும் என்று தொகுதி பங்கீட்டில் தி.மு.க கறாராக பேசுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க அதன் கூட்டணி கட்சிகளான வி.சி.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லிக் ஆகிய கட்சிகளுக்கு 2024 லோக் சபா தேர்தலில், தலா 1 இடங்களை வழங்க முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



தி.மு.க கூட்டணியில் உள்ள திருமாவளவன் தலைமையிலான வி.சி.க-வுக்கு கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதிலும், விழுப்புரத்தில் வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அக்கட்சி 3 இடங்கள் கேட்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக வி.சி.க வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஆனால், தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க.வுடன் தி.மு.க இன்னும் முதற்கட்ட பேச்சுவார்த்தை  நடத்தவில்லை என்றாலும், இந்த முறை வி.சி.க-வுக்கு ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்க தி.மு.க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம், தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களு அறிவித்துள்ளார். நம்முடைய வேட்பாளர் வெற்றி பெறச் செய்யவில்லை என்றால் மவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்று அக்டோபர் 1-ம் தேதி காணொலி வழியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். 

மேலும், கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களில் ஒதுக்கிவிட்டு தி.மு.க அதிக இடங்களில் போட்டியிட விருப்பத்துடன் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், தி.மு.க ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்குப் பிடித்த இடங்களின் பட்டியலையும், அங்குள்ள பூத் கமிட்டி அணிதிரட்டலையும் தங்களுக்குத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய 2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட, இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதலாக இடங்கள் கேட்டு பெறலாம் என்று இருந்த தி.மு.க கூட்டணி கட்சிகளான வி.சி.க, ம.தி.மு.க, முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 1 இடம் மட்டுமே அளிக்க  முன்வந்துள்ள தி.மு.க தொகுதிப் பங்கீட்டில் கறாராக இருப்பதால் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தி.மு.க கூட்டணியில் உள்ள சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) ஆகிய 2 இடது கட்சிகளுக்கும் கடந்த தேர்தலைப் போலவே தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

 

அதே நேரத்தில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment